பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் 87 உடைக்க முடியும் என்ற உண்மையை உணர்த்தி, உடைத்துப் பல பொருள்களைப் பெறும் காட்சியை நல்கியபோதும் உணர்வின் துணைகொண்டு வளர்ந்த கீழைநாட்டுச் சமயம் அசையவில்லை எனக் காண்கிறோம். அறிவின் துணைகொண்டு வளரும், வளர்ச்சி எல்லை உடையது எனக் கண்டு. கொண்டுள்ள இன்றைய சூழ்நிலையில் இது சரி என்று நம்மவர் கூறுகின்றனர். - பொருளாதாரக் கோட்பாடுகள் நாளுக்கு நாள் எவ்வாறு மாறுபடுகின்றன? அவ்வாறானால் நூற்றாண்டுக்கு நூற்றாண்டு எவ்வளவு மாற்றத்திற்கு உள்ளாக வேண்டும்? இவ்வளவு விரைவாக மாறுகின்ற இயல்புடைய அறிவு வளர்ச்சியின் மீது, நம்பிக்கையின் அடிப்படையில் வாழவேண்டிய சமயத்தைக் கட்டினால் அது அசைந்து ஆட்டம் கொடுத்து விடுகிறது. எனவே, இந்த உண்மையை அறிந்த கீழை நாட்டான் புற வாழ்க்கை வளமாக அமைய அறிவின் துணை வேண்டும், அக வாழ்க்கை அமைதியுற வேண்டுமாயின் உணர்வின் அடிப்படையில் அமைந்த சமயத்தின் துணை வேண்டும் என்ற முடிவுக்கு வந்து விட்டான். இந்த இரண்டோடும்தான் மனிதன் வாழ்கின்றான். இந்த அடிப்படை இப்படியே வளர வேண்டும் என்பதுதான் கீழை நாட்டு மரபும் குறிக்கோளுமாகும். இங்கே நாம் காணுகின்ற விளக்கையும் ஒலி பெருக்கியையும் காணும்போது எடிசனையும், மார்க்கோனியையும் எண்ணிப் பார்த்து நன்றி கூறுகின்றோமா? பென்சிலின் ஊசியை விரும்பிப் போட்டுக் கொள்ளும் யாரும் சர் அலெக்சாண்டர்