பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழக்கும் மேற்கும் , 89 கண்களைத் திறந்து பார்த்தாள். "உப குப்தரே! தாங்களா? இந்நிலையிலா என்னிடம் வந்தீர்?" என்று வியந்து கேட்டாள். 'தாயே! உன் பழைய நிலைமைக்கும் இப்போதைய நிலைக்கும் என்னைப் பொறுத்தமட்டில் வேறுபாடு கிடையாது” என்று அமைதியாக விடை இறுத்தான் உபகுப்தன். அறிவின் துணை கொண்டு பார்க்கும்போது அவள் முன்னைய வாழ்விற்கும் பின்னைய வாழ்விற்கும் வேறுபாடு உண்டு. உணர்வின் துணை கொண்ட இந்நாட்டுச் சமய அடிப்படையில் காணும்போது இரண்டு வாழ்விற்கும் இடையில் வேறுபாடு கான முடியவில்லை. ஏன்? அன்றிருந்த அவளேதான் இன்றும் இருக்கிறாள். முன்பு நன்கு அமைந்திருந்து இன்று அழுகிப்போன அவளுடைய உடலை அன்றும் இன்றும் சமயவாதி மதிக்க மாட்டான். அழிவில்லாத அவளுடைய ஆத்மாவை அவன் என்றும் காண்கிறான். அவளுடைய உயிருக்குத் துணையாக, கருவியாக நின்ற உடம்பு அன்று காண அழகாய் இருந்தது, இன்று சீழ் வடிகிறது. அவ்வளவுதான் வேற்றுமை! உள்ளே இருக்கும் அவளாகிய ஆன்மா இன்றும் அன்றும் ஒன்றே. அன்றைக்கு அந்த உடம்பு வேறு காரணத்திற்காக உபகுப்தனை நாடிற்று. இன்று அந்த உடம்பை விட்டு விட்டு ஆன்மாவை உபகுப்தன் நாடிச் சென்றான். அன்றைய நாட்டம் அழிகின்ற கருவியாகிய உடம்பின் அடிப்படையில் வேறு காரணத்திற்காக நிகழ்ந்தது. உபகுப்தனோ, அழியாத ஆன்மாவை அன்றும் இன்றும் நாடினான். அத்னால் அவள்மீது அவனுக்கு வெறுப்புத் தோன்றவில்லை; இன்றும் நாடுகிறான், அதனால் அவளுக்கு இரங்கிப் பணிவிடை புரிகிறான்.