பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92 அ.ச. ஞானசம்பந்தன் உலக வாழ்க்கை வளர்ந்தாலும் வளரவில்லை யென்றாலும் அகவுலக வாழ்வில் வளர்ந்து அமைதி காண இயலும் என்றும் ஒரு பேருண்மையைக் கண்டதும் கீழைநாட்டுச் சமயங்களேயாகும். இந்த அகவுலக வாழ்க்கைதான் மனிதனுடைய முழுமை யான ஆளுமையே தவிரப் புறவுலக வாழ்க்கை அன்று என்றும் கூறிற்று. அதற்கு மேலும் சென்று, அகவுலக வாழ்வில் முழு வளர்ச்சியடைந்தால் தான் உலகம் முழுவதனையும் ஒன்றாகக் காண முடியும் எனவும், மக்களைச் சகோதரராகக் கருதுவதோ பிறருடைய வாழ்க்கைக்காகத் தன் வாழ்வைத் தியாகம் செய்வதோ அறிவுலக வாழ்விலே இயலாது எனவும் கூறி, அகவுலக வாழ்வில் வாழ்ந்து பயின்றவர்களால்தான் இவை இயலும் எனவும் உணர்ந்து கூறியுள்ளனர். இதன் மறுதலையாக அறிவின் துணை கொண்டு காணப்பட்ட விஞ்ஞானப் புதுமைகளின் மீது தங்கள் சமயக் கோட்டையைக் கட்டிய மேலை நாடுகள் அந்தப் புதுமைகள் மாற மாறத் தம் சமயக் கோட்டைகளில் விரிசல்கள் வரவர சமயக் கருத்துக் களையும் மாற்றிக்கொண்டே சென்றுவிட்டன. அப்படி மாற்றினாலும், அதிலும் ஒரு நன்மை உண்டு - Adventures of Ideas - grgrip/lb Gaffanrif. Ll{Fu Listuu கருத்துக்களைக் காண்பதில் ஒரு வேகம் இருந்தது அவர்கட்கு. நமக்கு அது இல்லாமல் போய்விட்டது உண்மைதான். 'புத்தம் புதிய கலைகள் மெத்த வளருது மேற்கே என்றால், அதற்குக் காரணம் அவர்களுடைய சமயக் கோட்பாட்டிலேயே இந்த அடிப்படை இருக்கிறது. சமயக் கொள்கைகளை மாற்றிக் கொண்டே சென்றுவிட்டனர். நம் நாட்டிலோ வேத காலத்திலிருந்து இன்றுவரை அது பெரு மாற்றங் களைப் பெறவே இல்லை. காயத்திரி மந்திரம்