பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 அ.ச. ஞானசம்பந்தன் பாலமாக வாழ்ந்தார் திவான்பகதூர். நாமம் போடுவது உளத்திற்காக; எஞ்சினியரிங் எண்டர்பிரைசஸ் உடம்புக்காக - இவை இரண்டும் நன்கு நடை பெற்றால் உங்கட்கு முழுமையான வாழ்வு அமைந்துவிடும். அவர்களைப் போல் அறிவை மட்டும் வளர்த்தால் ஹிரோசிமாவும் நாகசாகியும் தான் எஞ்சும். அதை விட்டுவிட்டு மனம் மட்டும் வளர்ந்தால் மரத்தடியில் உட்கார்ந்து 'சாம்ப சதாசிவ' என்று பாடவேண்டியதுதான். ஆகவே, இரண்டும் வேண்டும். அகமும் வேண்டும் - அது அமைதிக்காக. புறமும் வேண்டும் - அது வாழ்க்கை வசதிக்காக. இவை இரண்டையும் சேர்த்துக்கொள்ளக் கூடுமானால் மேற்கையும் கிழக்கையும் சந்திக்க வைக்க முடியும். அப்படியொரு வளர்ச்சி ஏற்பட்டு - அறிவின் துணைகொண்டு வளரும் வளர்ச்சிக்கும் உள்ளத்தின் துணை கொண்டு வளரும் வளர்ச்சிக்கும் இடையே சண்டையோ, பிணக்கோ, மோதலோ இல்லையென்ற பேருண்மையை அறிந்து வாழத் தலைப்பட்டால், பாரதி கூறியபடி இந்த உலகம் தேவர்கள் வாழுகின்ற உலகமாக ஆதல் கூடும்.