பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 97 விஞ்ஞான உலகாயதமும் நாமெல்லாம் எண்ணுவது போல அவ்வளவு எளிதானதன்று. இந்த நாட்டில் தோன்றிய பல்வேறு நூல்கள் - தமிழ் நாட்டைப் பொறுத்த மட்டில் சைவ சித்தாந்த நூல்களுள் தலை சிறந்தது என்று கூறப்படுகின்ற சிவஞான சித்தியார் தொடக்கம் வடநாட்டில் தோன்றிய பல நூல்கள் ஈறாக - உலகாயதத்தினை மறுத்துள்ளன. மறுக்கின்றன என்றாலும் அவ்வளவு எளிதாக உலகாயதத்தினை மறுத்துவிடவும் இயலாது என்பது உண்மை. காரணம், அவ்வளவு ஆழமாகச் சென்று பொருள்களைப் பற்றி உலகாயதவாதிகள் ஆராய்ந்துள்ளார்கள். நாம் இரண்டு மூன்று அடிப் படையில் நின்று அதனைக் காண்டல் வேண்டும். தமிழ் நாட்டில் தோன்றிய சித்தியாரில் சுபக்கம் என்ற பகுதி வருகிறது; பரபக்கம் என்ற பகுதியும் வருகிறது. மேலை நாட்டிலிருந்து வந்துள்ள சில நூல்களைப் பார்த்தால்தான் எந்த அடிப்படையில் இவை தோன்றுகின்றன எனப் பாகுபடுத்தல் இயலும். உலகாயதத்தை வரலாற்று அடிப்படையில் கர்ணப் படுகின்ற உலகாயதம், அறிவின் துணைகொண்டு ஆராய்கின்ற உலகாயதம் என்று இரண்டாகப் பிரித்து விடலாம். இவை இரண்டிற்கும் தொடர்பு உண்டு. ஆனால் இரண்டும் வெவ்வேறு திசை நோக்கிச் செல்கின்றன. அறிவின் துணைகொண்டு ஆராய்கின்ற உலகாயதம் தான் இந்நாட்டு நூல்களில் பரபக்கம் என்ற பகுதியில் மறுக்கப்படும் உலகாயதம் ஆகும். - அளவைகள் எனப்படுபவை மூன்று. அவற்றில் காட்சி அளவையைத் தவிரப் பிறவற்றை உலகாயத

  • பிறர் கோட்பாடுகளை எடுத்துச் சொல்லி மறுப்பது பரபக்கம் எனப்படும்.