பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 0 அ.ச. ஞானசம்பந்தன் போல அணுக்களால் ஆன உடம்பும் பிறவும் இறக்கும் காலத்து மீண்டும் அணுக்களாக ஆகிவிடுகின்றன என்றால், காணப்படும் பொருள் ஐம்பூதங்களின் சேர்க்கைதானே? மனிதன் இறக்கையில் அவை ஐம்பூதங்களாகப் பிரிந்து, அது அது தன் மூலப் பொருளோடு சேர்ந்துவிட்டது; அவ்வளவுதான்' என்பார்கள். மண்ணுக்கு உருக்கொடுத்தபோது சட்டி 'என்ற பெயர் பெறுதல்போல, ஐம்பூதங்களின் சேர்க்கையில் உண்டாகிய மனித உரு ஞானசம்பந்தம் என்று பெயர் பெறுகிறது. 'சட்டி உடைந்தால் மண்ணோடு மண்ணாதல் போல, மனிதன் இறந்த போது தன்மைகள் பிரிந்துபோய் விடுகின்றன என்று கூறுகின்றார்கள். - ஒருவர் எவ்வளவுதான் உயர்ந்தவரானாலும் அவர் இறந்தபோது, பெரிய மனிதரை எடுங்கள் என்றா கூறுகின்றனர். இல்லையே. பிணத்தை எடுங்கள் என்றுதானே கூறுகின்றனர்! இதனைத் திருமூலர் "பேரினை நீக்கிப் பிணம் என்று பேரிட்டு” என்று குறிப்பிடுகின்றார். இதுதான் மரபு. அணுக்கள் சேர்ந்து ஒரு வடிவாக வந்த இந்த உடம்பு அதன் வேலை தீர்ந்த பிற்பாடு - கல்யாணத்திற்குக் கடன் வாங்கிய சாமான்களைக் கல்யாணம் முடிந்தவுடன் திருப்பிக் கொடுத்து விடுதல் போல - வேலை முடிந்த உடன் எல்லாம் அணுவாய்ப் போய்விடுகின்றன. ஐம்பூதங்கள் ஒன்றாகி வாழ்ந்து பிரிந்தவுடன் ஐம்பூதங்களின் பல்வேறு அணுக்களாய்ப் பிரிந்து போய்விடுகின்றன என்பார். ஆனால், ஒரு கேள்விக்கு இவர்கள் பதில் சொல்லாமல் விட்டுவிட்டனர். இந்த அணுக்கள் சேர்ந்தன; உருவாக மாறின; உண்மைதான். 'இவை எப்படிச் சேர்ந்தன, ஏன் சேர்ந்தன என்பதற்குச் சரியான பதில் இல்லை. ஆனால், விகிதாசாரம்