பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 103 பெறுகின்ற சுகங்களே உண்மையான சுகங்கள். இவை யெல்லாம் அடங்கிவிட்டால் பெறுவது என்ன? இந்த அடிப்படையை ஒருவாறு விளங்கிக் கொண்டால் மேலை நாட்டவர் காட்டும் உலகாயதத்தினை ஒருவாறு புரிந்து கொள்ள முடியும். அவர்கள் காட்டுவது இரண்டு வகை உலகாயதமாகும். ஒன்று வரலாற்று முறையில் பேசப்படுகின்ற உலகாயதம். மற்றொன்று விஞ்ஞான முறையில் பேசப்படுகின்ற உலகாயதம். மக்கள் வாழ்கிறார்கள்; பொருள்களை உற்பத்தி செய்கின்ற னர்; பணி செய்கின்றனர்; பொருளிட்டுகின்றனர்; வம்ச விருத்தி செய்கின்றனர். இதுதான் வாழ்வு. இந்த உறவு தான் சமுதாய வாழ்வாகிறது. இதில் மனிதன் நின்று விடுவானேயானால் மனிதன் எத்தனையோ ஆயிரம் ஆயிரமாண்டுகள் பின்னால் நிற்க வேண்டும். இந்த உறவு முறைக்கு அடிப்படையில் வேறு ஒன்று வந்து விடுகிறது. மனிதர்களுக்கு இருக்கின்ற உணர்ச்சி. இந்த உணர்ச்சிகளுக்கு அடிப்படையில் இருக்கின்ற ஏதோ ஒன்று, அந்த உணர்ச்சிகள் பிறரிடம் சென்று தாக்குவதனாலே ஏற்படுகின்ற எதிர்ச்செயல்கள் (reaction) - இவற்றைப் பற்றிப் பேச வந்த அவர்கள் 'இதுதான் அடிப்படை, இந்த அடிப்படையிலிருந்து எதனையும் பெற்றுவிடலாம்” என்று சொன்னார்கள்": ஜடப் பொருள் (matter) - இந்த ஜடப் பொருள்களுக்குச் சில இயல்புகள் உண்டு. வடிவம், உருவம், பல்வேறு வடிவங்களையும் உருவங்களையும் பெறுதல் இவற்றிலெல்லாம் பிரச்சினையே கிடையாது.

  • The relationship between social being and social conciousness. As a result of this, definite relations or formed between them which constitute the material life of society as it is Social being,