பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 அ.ச. ஞானசம்பந்தன் இதனை அடுத்த நிலைக்குப் போகும்போது இந்த ஜடப் பொருள்களுக்குரிய இயல்புகள் மாறிப் புதிய இயல்புகளை ஏற்கும்போது தொல்லை வருகிறது. நல்லவன், தீயவன், கோபக்காரன், அன்புடையவன் என்று கூறப்படுகிற சில இயல்புகள் உண்டே, இவற்றை யெல்லாம் எதில் கொண்டுபோய் அடக்குவது? நினைக்கும் இயல்பு மனத்திற்கு உண்டு. ஆனால், மனம் என்பது என்ன? இங்கேதான் இரு சாரார்க்கும் மோதல் ஏற்படுகின்றது. அந்த மனமும் ஜடப்பொருள் என்றார்கள் உலகாயதர்கள். அது எப்படி ஜடப் பொருளாக இருக்க முடியும்? பருப்பொருளாக (concrete) இருக்கும் தன்மை மனத்திற்கு ஏற்றப் பட்டால் இந்த வாதத்தைச் சுலபமாக முடித்துக் கூறி விடலாம். ஆனால், இவ்வாறு சொல்லுகின்ற அவர்களே ஜடப்பொருளாக இருக்கும் ஒன்றிற்கு ஏற்றப்படுகின்ற குணங்கள் பருத்தன்மை உடையன வாக உள்ளனவற்றிற்கு ஏற்றப்பட முடியுமே தவிர நுண்மையாக உள்ள பொருள்களுக்கு ஏற்றப்படக் கூடியன அல்ல என்பதைக் காண முடியும். இதனை முதலில் கூறியவர் யார் தெரியுமா? பிரகஸ்பதி பகவானே ஆவார். பிரகஸ்பதியோ தேவகுரு. இப்படியொரு குரு கிடைத்திருந்தால் அந்தத் தேவர்கள் அரக்கர்களோடு சண்டை போட்டுக் காலம் கழித்ததில் வியப்பில்லை! ஸ்தல புராணங்கள் அனைத்தும் தேவர்கள் செய்த பாவ விமோசனத்திற் காகப் பூலோகத்தில் வந்து தவம் செய்ததனையே குறிப்பிடும். இதன் அடிப்படை நுணுக்கம் இதுதான். நாம் நினைக்கின்றபடி போக பூமியில் உள்ளவர்கள் எவ்வாற்றானும் உயர்ந்தவர்களல்லர். சூழ்நிலை காரணமாக அவர்கள் அங்கே உள்ளார்கள், நாம் இங்கே இருக்கின்றோமே தவிர வேறு இல்லை. இந்தப்