பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 105 பிறவியில் நாம் பெற்ற பயனைத் தேவர்கள் கூடப் பெறவில்லை. ஆகவே, தேவர்கள் என்றால் உயர்ந்த வர்கள் என்று எண்ண வேண்டா என்பதற்காகவே இப்படிப்பட்ட கதைகளைக் கட்டினார்கள். தேவர் களின் குருபகவானாகிய வியாழபகவான் தான் இந்தச் சாங்கிய மதத்தினை உண்டாக்கியவன் என்று கூறுகின்றார்கள். அவ்வளவு பழைய காலத்தில் பேசிய அந்தக் கருத்தைச் சமீப காலத்தில் பிறநாட்டு உலகாயதர்கள் பேசுகிறார்கள். நுண்மையான இயல்புகள் எப்படி ஜடப்பொருளுக்கு இயல்பாக இருக்க முடியும்? சமுதாய மக்கள் வாழ்கின்றார்களே, இவர்க ளெல்லாம் ஜடப்பொருளின் உறுப்புக்களாவர். ஜடப் பொருள் வடிவாக இருக்கவேண்டிய மக்கள் ஒன்று கூடிச் சமுதாயமாக வாழும்போது அறிவுத்துறையில் அரசியல், ஒழுக்கம், பொருளாதாரநிலை, கலைத்துறை gågsøsub (economical standard, artistical worth, philosophical doctrine) என்ற இவ்வளவும் மக்களுடைய சிந்தனை என்ற ஒன்றின் அடிப்படையிலே தோன்றியவை. இவைகளை எதில் கொண்டுபோய்ச் சேர்ப்பது? ஜடப் பொருளாக இருக்கின்ற ஒன்றிற்கு இவ்வளவு இயல்பு களையும் ஏற்ற முடியுமா? பழங்கால லோகாயத வாதிகள் கொஞ்சம் விழித்துக் கொண்டார்கள். பேப்பர் என்றும், மைக்ரோஃபோன் என்றும், பேனா என்றும், மேஜை என்றும் உள்ள ஜடப் பொருளைப் பற்றி ஆராய்கின்ற பகுதியை மெட்டீரியலிசம் என்று சொன்னார்கள். மனிதனுடைய சிந்தனையின் அடிப்படையில் தோன்றியவைகளை மெட்டீரியலிசம் என்று சொல்லவே இல்லை. . மெட்டீரியலிசம் பேசி, இந்த உலகத்தில் உலவு கின்ற ஒரு சிலருள் தலையாக நிற்பவர் மார்க்ஸ்.