பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 அ.ச. ஞானசம்பந்தன் ஜெர்மனிக்காரர்கள் மார்க்ஸ் பற்றிச் சொல்கிறார்கள். ரஷ்யர்கள் சொல்லுகிறார்கள்; கிழக்கு ஜெர்மனிக் காரர்கள் சொல்லுகின்றார்கள்; சீனர்கள் சொல்லு கின்றார்கள். இவர்கள் கூறும் அத்தனையையும் ஒன்றாக்கிப் பார்த்தால், இந்த மார்க்ஸ் என்னதான் சொன்னார்' என்று சிந்திக்கவே முடியவில்லை. ஏனென்றால் வெள்ளைத் தாள் வெள்ளையென்று ஒரே கூற்றை எல்லோரும் சொன்னால் நியாயமானது. ரஷ்யாக்காரர் தாளைக் கறுப்பு என்று சொன்னால், சீனாக்காரர்கள் நாங்கள்தான் உண்மை நிறம் கண்டோம்; அது கறுப்பு அன்று, மஞ்சள் என்று பேசுவார்கள். இப்படி முரண்படுகின்ற, சொல்லி லேயே எல்லையில்லாத கருத்து வேற்றுமைக்கு இடம் தருகின்ற கோட்பாட்டை மார்க்ஸ்தான் முதன் முதலில் ஆரம்பிக்கின்றார். மார்க்ஸ்தான் இதற்குச் செம்மையான ஒரு கட்டளைக்கல் விதித்துக் கொடுத்தவர் என்று விஞ்ஞான முறை உலகாயதம் பேசுகிறவர்கள் கூறுகின்றார்கள். இனி, அவர்கள் பேசுவதனுடைய அடிப் படைக் கருத்தைச் சுருக்கிச் சொல்லிவிடலாம். மக்களுடைய வாழ்க்கையில் சொல்லப்பட்ட இந்தக் கருத்துக் குவியல்கள் இருக்கின்றனவே, இவை யெல்லாம் அவர்கள் வாழ்க்கையின் அடிப்படையில் உண்மையானவையாகத் தோன்றியனவாய் இருப் பினும் அங்கே பண்பு என்று எதுவும் கிடையாது. அந்த ஜடப் பொருள்களுக்கு உள்ள ஓர் இயல்பு, அந்த இயல்பில் இந்தக் குணங்களும் வந்தன. உண்மையான இந்தக் குணங்களும் அந்த ஜடப் பொருள் தன்மையிலேயிருந்து தோன்றின. அதை அப்படியே யோசித்துக்கொண்டேயிருக்க வேண்டியதுதானே தவிர, வேறு எதுவும் கிடையாது.