பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 107 ஜடப் பொருளைப்பற்றிச் சிந்திக்கின்ற இயல்பு ஒருபுறம் இருக்க, உண்மையான அறிவிாவது இருக்கின்றதா என்று கேட்டால் உண்டு என்று பேசினார். எப்படி அவை இருக்கின்றன? அணுக்கள் என்ன செய்கின்றன? அணுக்கள் ஓயாமல் சுற்றித் திரிகின்றன. இந்த இயக்கம் அணுக்களுக்கு இயல்பு. அதற்கு விஞ்ஞானமும் இவர்களுக்கு ஏற்றாற்போல் ஒத்தாசையும் செய்துவிட்டது. ஆகவே, மெட்டீரிய லிசம் பேசுவோர் மெட்டீரியலிசத்திற்குரிய விஞ்ஞானத்தின் சூழ்நிலை கொண்டு இலக்கணம் வகுத்தார்கள். அப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றமடைந்து, மேட்டர் (matter) என்று சொல்லுகின்ற ஜடப்பொருள், இயங்கும் இயல் புடையது என்ற விஞ்ஞானக் கருத்து வந்தவுடனே இவர்களும் சேர்ந்துகொண்டு "ஆமாம் ஆமாம், நாங்கள் சொன்ன மாதிரிதான் விஞ்ஞானமும் கூறுகிறது” என்கின்றனர். அந்த ஜடப்பொருளுக்கு இயக்கம் உண்டு என்பதை நாங்களும் ஒத்துக் கொள்கிறோம்; முன்னோக்கிப் போவதுதான் இயக்கம் என்று எண்ணாதே; பின்னோக்கிப் போவதும் பக்கவாட்டில் போவதும் இயக்கம்தான். ஆகவே, மக்கள் கூட்டமாகச் சேரும்பொழுது அவர்களுக்கு முன்னோக்கிச் செல்கின்ற எண்ணங்கள், பிறர் தங்களுடைய பிற்காலத்தில் வரலாற்றைப் பற்றிச் சிந்திக்கின்ற எண்ணங்கள், சமுதாயத்தில் எப்படி யெல்லாம் வாழ வேண்டும் என்று தோன்றுகின்ற எண்ணங்கள் ஆகிய இவையெல்லாம் தோன்றினாலும் இவைகளும் அணுக்களின் இயக்கம் என்று முடித்தார். மனிதனுடைய சிந்தனையை அணுக்களின் இயக்கத் தோடு முடிச்சுப் போட்டு, இதுதான் அது என்று சொல்கின்ற அளவில் மார்க்ஸ் போய்விட்டார்.