பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 அ.ச. ஞானசம்பந்தன் - இதில் வருகின்ற இடைஞ்சல் என்ன வென்றால், இன்னும் அதைப் பூரணமாக எடுத்துக் கொள்ள முடிவதில்லை. எவ்வளவுதான் டயலெக்டிக் மெட்டீரியலிசம் படித்தாலுங்கூட, எதை எடுத்தாலும் இயல்பு என்றும் - இவன் நல்லவனாக இருக் கின்றானே' என்றால் 'நல்லவனாக இருப்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை, இது அவன் இயல்பு என்றும் - இவன் முழுக் கெட்டவனாக இருக்கின்றானே ராபர்ட் கிளைவ் மாதிரி என்றால், 'அது அவனுடைய இயல்பு என்றும் கூறப்படுகிறது. புறநானூற்றில், - நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற். பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே (புறம் 192) என்று ஒரு பாடல் உண்டு. பெரியோரைப் புகழ்தலும் இல்லை, சிறியோரை இகழ்தல் அதனினும் இல்லை. ஏன் தெரியுமா? நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படும் என்பதைத் திறவோர் காட்சியில் தெளிந்தனம்! ஒர் ஆற்றில் கட்டையைத் துரக்கிப் போட்டால் என்ன செய்யும்? தண்ணிர் எப்படி ஒடுகிறதோ அப்படிக் கட்டையும் போய்க் கொண்டிருக்கும். கட்டைக்கு என்று சுய இயல்பு கிடையாது. தண்ணிர் எந்த வேகத்தில் எந்தத் திசையை நோக்கிப் போகிறதோ அந்த வேகத்தில் அந்தத் திசையில் அந்தக் கட்டையும் போய்க் கொண்டிருக்கும். அதுபோல இந்த மக்களுடைய உயிர்கள் என்ன என்ன விதிக்கு உட்பட்டு