பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 111 முடியாதபடி முள்ளைக் கொண்டுபோய் வைத்தானே" என்று நினைக்கிறான், மற்றொருவன். பாரதம் பாடிய வில்லிபுத்துரார் கண்ணபிரான் நினைவில் ஈடு படுகிறார்; அளைகமழ் பவளவாயனை என்று துதிக்கிறார். 'வெண்ணெய் வாசம் வீசுகின்ற அற்புதமான திருவாயினை உடைய பெருமானே' என்கிறார். அதே பாரதத்தில் துரியோதனன் என்பான், அதே கண்ணனைப் பார்க்கிறான். இதே அடை மொழிகளை அவனும் கொடுக்கிறான். ஆனால், கொஞ்சம் மாறுபாடுதான். 'நாற்றம் அடிக்கும் வெண்ணெயைத் தின்ற நாற்ற வாயா!' என்றான். தப்பா அது? திருட்டு வெண்ணெய் சாப்பிடுகிறவன் எங்கே நல்ல வெண்ணெய் எடுக்க முடியும் ? "முடையெடுத்த நவநீதம் தொட்டுண்டும், கட்டுண்டும் முன்னாள் நாகக் குடையெடுத்து மழைதடுத்தும் வஞ்சனைக்கோர் கொள்கலமாம் கொடிய பாவி' என்று துரியோதனன் அதே கண்ணனைப் பற்றிப் பேசுகிறான். கண்ணன் ஒருவன்தான். அந்த முழுமுதற் பொருளாகிய அவனே காண்பானுடைய காட்சி யளவில், அவனுடைய பண்பாட்டின் உயர்வாகக் காட்சியளிக்கின்றான். வில்லிபுத்துராருடைய காட்சி யில் அளை கமழ் பவளவாயினனாகக் காட்சி யளிக்கின்றான். துரியோதனனுடைய காட்சியிலே "முடையெடுத்த நவநீதம் உண்டு கட்டுண்ட பாவியாகக் காட்சியளிக்கின்றான். இதே கருத்தைத் தான் இங்கே கொண்டு வர வேண்டும், வேறு வழி இல்லை. ஒலிவாங்கி (மைக்) என்ற வடிவம் ஒன்றும் இல்லை; ஆனால் காண்பானுடைய காட்சியளவிலே தான் உருவு, வடிவு, பண்பு, நிறம் ஆகிய அத்தனையும் தோன்றுகின்றன என்ற லாக்கேயின் கருத்தை அப்படியே இங்கு வாங்கிக் கொள்கின்றார் லெனின்.