பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 அ.ச. ஞானசம்பந்தன் "ஐயா, நீர் பார்க்கின்ற இந்தப் பிரபஞ்சம் இருக்கின்றதே இதற்கென்று ஒரு வடிவு, உரு ஒன்றும் கிடையாது. இது ஒரு ஜடம். அது ஒரு ஜடம். இது பச்சையாக இருக்கிறது, நீலமாக இருக்கிறது, சிவப்பாக இருக்கிறது, மேஜையாய் இருக்கிறது, நாற்காலியாய் இருக்கிறது என்றால், உம்முடைய பொறி புலன்களின் மூலம் உள்ளே சென்று இந்தப் பொருள்கள் உம்முடைய மனத்தில் படிந்து வடிவத்தைக் கொடுக் கின்றன; அவ்வளவுதான். "வட்டம் ஒன்றை வரைந்து விட்டு நான்கு பேரைக் கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள் தெரியும். சும்மா பார்க்கச் சொன்னால் சரியில்லை. இந்த வட்டம் சரியாக இருக்கிறதா என்று கேட்டுவிட வேண்டும். பிறகு பார்க்கச் சொல்ல வேண்டும். ஒருவேளை சரியில்லாமல் இருக்கலாம்' என்று நினைத்துப் பார்க்கும்பொழுது, சரி இல்லாமல் இருக்கிற மாதிரியும் தெரியும். பொறி புலன்கள் வெகு விரைவில் மனிதனை ஏமாற்றிவிடும் என்பது விஞ்ஞானம் படித்த அத்தனை பேருக்கும் தெரியும். ஆனாலும் இந்தப் பொறி புலன்கள் மேல்தான் நமக்கு நம்பிக்கை அதிகம். இனி, அதற்குமேல் ஒருபடி போகின்றார்கள். அதற்கு அப்பாற் பட்டிருக்கின்ற உண்மையான கருத்துக்களைப் பற்றியும் இந்தப் பிரபஞ்சத்திற்கு மூல காரணமாக இருக்கின்ற கடவுளைப் பற்றியும் ஆராய் கின்றபொழுது வரலாற்று முறை உலகாயதவாதிகள் அந்த ஆராய்ச்சியில் ஈடுபடாமல் விட்டு விடுகின்றார் கள்; இருக்கலாம். நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஆனால், விஞ்ஞான முறையில் மெட்டீரியலிசம் பேசுகின்றவர்கள் இருக்கின்றார்களே, அவர்கள் இவற்றை'இல்லை என்று மறுக்கின்றார்கள். இப்படியொரு பொருள் இருத்தலுக்கே இடம் இல்லை.