பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 ல் அ.ச. ஞானசம்பந்தன் ன்றுள்ள அனைத்தையும் அவை பருப் பொருளாயினும் சரி, நுண் பொருளாயினும் சரி, கருத்துக்களாயினும் சரி - அத்தனையையும் இயக்கம் (மோஷன்) என்ற வார்த்தையில் அடக்கப் பார்க்கிறார் கள். இந்த விஞ்ஞான உலகாயதர்களுக்கு எதை எடுத்தாலும் இயக்கம், இயல்பு என்று கூறி விட்டால், முடிந்தது. இனி, அதற்குமேல் உணர்வுக்கும் (consciousness) வருகிறார்கள். அதாவது, ஜடப் பொருள் களினுள் வளர்ந்துள்ளதாகிய நம்முடைய மானிட உடம்பு இருக்கிறதே, உயிர் உடைய உடம்பு - அது மிகவும் உயர்ந்தது. அதாவது புல்லாய், பூடாய், மரமாய், புழுவாய். எல்லாம் உயிருள்ள பொருள்கள் தாம்; என்றாலும் அவைகளுக்குள்ளேயும் நாம் உயர்ந்திருப்பதாக நமக்கு ஒரு கர்வம். நமக்கு மேல் ஒன்றும் கிடையாது; நமக்கு மேல் வளர்ச்சியுடைய பொருள் இருக்கின்றதென்றால், அது நாமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அளவில் அகங்காரம் கொண்டிருக்கின்றோம். மனிதனுக்குரிய சிறப்பு இயல்பாகச் சொல்லப்படுகின்றது இந்த உணர்வு. அதையும்கூட ஜடப் பொருளின் ஒருவகை இயக்கத் தால் கிடைப்பது என்று பேசிவிடுகின்றார்கள். தன்னுணர்வின் வெளிப்பாடாக இருக்கின்ற சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தம் என்று சொல்லுகின்ற - ஐந்து வகையான பொறி உணர்வுக்கும் அடிப்படையாக இருக்கின்ற - ஐந்து பொறிகளினாலே உணரப்படுகின்ற உணர்வுகள், அந்த உணர்வின் அடியிலே தோன்று கின்ற சிந்தனைகள், அந்தச் சிந்தனையின் வெளிப் பாட்டின் வழியாகத் தோன்றுகின்ற கருத்துக்கள், அந்தக் கருத்துக்கள் தோன்றுவதனாலேயே ஒன்றோ டொன்று மோதுகின்ற எண்ண ஓட்டங்கள் - இவை