பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 அ.ச. ஞானசம்பந்தன் பேசுகிறான். பிம்பிசாரன் கேள்வி கேட்கிறான்: 'ஆனந்தா, மறு பிறப்பு ஒன்று உண்டு என்று நம்புகிறாயா?" "குருதேவன் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை" ன்ெபது ஆனந்தனின் விடை "சரி கடவுள் உண்டு என்று நம்புகிறாயா?” என்ற வினாவிற்குக் "குருதேவர் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை" என்றே விடை தருகிறான். இப்படி மூன்று கேள்விகளையும் மிக அழகாக மறுத்து விடுகின்றான். அதிலும், இல்லையென்று ஆனந்தன் சொல்லாமல் 'குருதேவர் அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை யென்று சொன்னானே தவிர, இது உண்டு இல்லை என்ற ஆராய்ச்சியில் இறங்கவில்லை. ஆகவே, பெளத்தர்கள் ஆன்மாவை ஒத்துக் கொண்டார்கள். ஆன்ம இலக்கணத்தை ஒத்துக் கொண்டார்கள். இந்த ஆன்மா அடையக்கூடிய பயன்களை ஒத்துக்கொண்டார்கள். ஆனால், இந்த ஆன்மாவிற்குரிய பயன்களைத் தரக்கூடிய கர்த்தா ஆகிய ஆண்டவனை மட்டும் ஒத்துக் கொள்ள வில்லை. அது அவர்களுடைய ஆன்மிக சமயம். உலகாயதர் களைவிட அதிகமாக ஒருசில படிகளை ஏறிப் போய் விட்டார்கள் என்பது உண்மை. சென்னைப் பட்டினத்திற்கு வந்தீர்களே யானால், கலங்கரை விளக்கம் (lighthouse) என்று ஒன்று இருக்கும். புதிதாக வருகிறவர்கள் அனைவரும் மேலே ஏறிப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். கிறுகிறுவென்று மேலே ஏறி, ஒடிப் போய்விடுகின்ற பையன்களும் உண்டு. கொஞ்சம் ஏறிப் போனவுடன் இடுப்பையும், முழங்காலையும் பிடித்துக்கொண்டு பாதியிலே உட்கார்ந்து கொண்டு "லைட் ஹவுஸ் பார்த்தது போதும், அம்மா!' என்று சொல்லிவிட்டு, ஊருக்கு வந்த பிறகு ஏம்பா லைட் ஹவுஸ்