பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 9 19 பார்த்தாயா என்று கேட்டால் 'ஆஹா, பார்த்தேனே! என்பவர்களும் உண்டு. இவர்கள் ஏறினது கால்வாசி தான். ஆனாலும் ஏறாத என்னைவிடக் கொஞ்சம் - பாதித்துாரம் ஏறினவர்கள்! உயர்ந்தவர்கள் தாமே பாதியாவது ஏறிவிட்டார்கள் இல்லையா? எனவே, அதுதான் லைட் ஹவுஸ் என்று கருதினால் தப்பு இல்லை. புத்தனுடைய நிலைமையும் அப்படிப் பட்டதுதான். ஆன்மாவை ஏற்றுக்கொள்ளுகின்ற புத்தன், ஆன்ம இலக்கணங்களை ஏற்றுக் கொண்ட புத்தன், அந்த ஆன்மாவின் இலக்கணங்களை அனுபவிக்க வேண்டுமேயானால், ஒரு கர்த்தா வேண்டும் என்பதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆகவே, ஆன்மிகத் துறையின் முதற்படியில் நிற்கின்றவன் புத்தன். இனி, அதற்கு அடுத்தபடியாக இந்த வடிவமற்ற இந்து சமயம் என்று சொன்னேனே - அது பற்றிக் காண்போம். நிர்த்தாரணம் பண்ணக் கூடிய அளவில் இந்து சமயத்தில் வெகுதூரம் முன்னேறிக்கொண்டு போயிருக்கிறார்கள். மேலை நாட்டுக்காரர்களைப் பொறுத்தமட்டில் - அதுவும் இந்த உலகாயதவாதிகள் இருக்கின்றார்களே அவர்களைப் பொறுத்தமட்டில் - புத்த சமயம் மிகவும் நன்றாகப் பிடிக்கும் அவர்களுக்கு. ஏனென்றால், அவர்கள் படிக்குமேல் ஒருபடிதான் போயிருக்கிறான் புத்தன். எனவே, விரும்புவது இயல்புதானே? உலகாயதத்தில் உழன்று கொண்டிருக்கின்ற மேலை நாட்டார்கள், உலகாயதத்திற்குமேல் ஒருபடி சென்று ஆன்மாவை மட்டும் ஒத்துக் கொள்ளுகின்ற பெளத்தத்தைத் தங்களுடையதாக ஏற்றுக் கொள்ளு கின்றார்கள். இன்றைக்கும் நீங்கள் பார்க்கலாம். மேலை நாட்டவர்க்குப் புத்த சமயத்தில் இருக்கின்ற ஈடுபாடும், ஈர்ப்பும், உணர்வும் மற்றச் சமயங்களில்