பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 121 சொல்லுகின்ற பிற உலகம், கடவுள் இவையெல்லா வற்றையும் புத்தர் சொல்லவில்லை. அந்த அளவில் அவர்கள் திருப்தியடைகிறார்கள். - இனிக் கீழைநாட்டில் தோன்றிய சமயங்கள் அனைத்தும் அதாவது உள்ளத்தில் எழுகின்ற அனுபவத்தைப் (experience) பொறுத்தே அமைகின்றன. Experience என்ற ஆங்கிலச் சொல்லுக்கு எவ்வளவு ஆழமான அழகான பொருளைத் தத்துவ வாதிகள் சொல்லுகின்றார்களோ, அந்த அளவிற்கு அனுபவம் என்ற சொல்லிலும் பொருள் காணவேண்டும். வேறு ஒரு வழியும் தெரியவில்லை. ஆன்மிகம் என்பது அனுபவத்தினால் அனுபவிக்கின்ற ஒன்றாகுமே தவிர, இது இன்னது என்று சொல்லித் தெரியாத ஒன்றாகும் என்று இந்தக் கீழை நாட்டுக்காரன் நினைக்கின்றான் போலும். தாய், தன் மணாளனோடு ஆடிய சுகத்தை மகள் கேட்டால், தாய் என்ன் சொல்ல முடியும்?" இவ்வாறு வள்ளலார் அனுபவத்தைப் பற்றிக் கூறுகிறார். இதற்கு மிகவும் முன்னரே தொல் காப்பியரின் 'அகம்' என்ற சொல்லுக்கு இன்னோர்க்கு இன்ன விதமாய் இன்னதென்று எடுத்துரைக்கப் படாததாய், உள்ளதே அகம்' என்றனர் உரையாசிரியர். உரைக்கப்படாததே தவிர அதனை அனுபவிக்க முடியும். சொல்லினால் சொல்லி விளங்க வைக்க முடியாது. சர்க்கரை இனிக்கும் என்று சொன்னால் விளங்கப் போவதில்லை. அதே போலத்தான் ஆன்மிகம் என்பது அறிவின் துணைகொண்டு ஆராயப்படும் ஒன்றன்று; உணர்வின்துணை கொண் அனுபவிக்கப்படுவது. * மிகவும் விரிவாக மாயைபற்றி முப்பது நூல்கள் (volume) எழுதிய சங்கரர் கடைசியில் எங்கே