பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ல் அ.ச. ஞானசம்பந்தன் கிறான். ஒரு செயலைச் செய்தால் எதிர்ச்செயல் உண்டு graşsp) Glåsfusiososuousso (action has got equal and opposite reaction) ஆகையினாலே அடக்கு என்று கூறாமல் அடங்கு என்று சொல்லுகின்றான். இராமகிருஷ்ணருடைய கதையைச் சொன் னால் நன்றாகப் புரிந்துவிடும் என்று நினைக்கிறேன். ஒருவர் தவம் பண்ண வேண்டும் என்று போனார். ஆற்றங்கரையில் உட்கார்ந்தார். தவம் பண்ண வேண்டு மானால் கண்ணை மூட வேண்டும் என்று யாரும் சொல்லவில்லையே! கண்ணைத் திறந்தே உட்கார்ந் திருந்தார். யாரோ ஒருத்தி அந்த வழியில் போனாள். அவளைப் பார்த்துச் சிந்தனை வந்தது. தவம் கலைந்தது. சேச்சே. கண்ணைத் திறந்து இருந்ததால் தான் இந்தப் பிரச்சினை என்று, மறுநாள் கண்ணை மூடிக் கொண்டார். அவள் வழக்கம்போலத் தண்ணீர் எடுக்கப் போனாள். அவள் காலில் போட்டிருந்த மெட்டி கல் கல்லென்று ஒலித்தது. அன்றைக்கும் தவம் காலியாயிற்று. மூன்றாம் நாள் பார்த்தார், இந்தப் பொறி புலன்கள் எல்லாம் திறந்திருந்தால்தான் இந்த வம்பு என்று நினைத்துக் கொஞ்சம் பஞ்சு எடுத்துக் காதையும் அடைத்துக்கொண்டார். கண்ணும் மூடி யாயிற்று காதும் மூடியாயிற்று. ஆனால், இந்த மனம் இருக்கின்றதே அது வினோதமான ஒன்று. காலையில் நாலரை மணிக்கெல்லாம் எழுந்திருக்க வேண்டு மென்றால் அலாரம் (alam) வைக்க வேண்டியதில்லை. அதுபற்றிச் சிந்தித்துக் கொண்டே படுத்திருந்தால், காலையில் எழுந்து விடலாம். இவருக்கு அந்த நேரம் வந்ததோ என்னவோ தெரியவில்லை. கண்ணும் மூடியிருக்கிறது. காதும் மூடியிருக்கிறது. இருந்தாலும், 'இந்த நேரத்துக்குத்தானே அந்த அம்மை