பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 125 தண்ணிருக்குப் போவார் என்று நினைத்தார்; உடனே கண்ணைத் திறந்துவிட்டார்! ஆகவே, பொறி புலன்களை அடக்குவதனால் மட்டும் தியானத்தைச் செய்ய முடிவதில்லை என்பது தெளிவாகிறது. ஆகையினால் இந்த நாட்டுக்காரராகிய திருமூலர் 'ஐந்தும் அடக்கு அடக்கு என்பார் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை என்றார். இந்த நாட்டுக்காரருடைய ஆன்மிகம் எப்படிப் போகிறது என்று பாருங்கள். பொறி புலன்களின் வலுவை அறிந்த இவர்கள் - பொறி புலன்களை அடக்குவதினாலேயே முழுப் பயனையும் அடைய முடியாது என்பதை உணர்ந்த இவர்கள் - அதை அடக்குவதனால் மோட்சம் போக முடியாது என்று கூறினர். இதனைக் கருதித்தான் வள்ளுவர் "ஐயுணர்வு எய்தியக் கண்ணும் பயமின்றே மெய்யுணர்வு இல்லாதவர்க்கு" என்றார். அடக்கினவர் மோட்சம் போவரென்றால் ஹிப்பிக்கள் அனைவரும் செயற்கை முறைகளில் பொறி புலன்களை அடக்கியவர்களே; ஆனால், அதனால் பயனில்லை என்பதை நம்மவர் கூறினர். 'ஐந்தும் அடக்கு, ஐந்தும் அடக்கு என்பார் அறிவிலார் ஐந்தும் அடக்கும் அமரரும் அங்கு இல்லை என்றால், பொறி புலன்கள் அடங்க வேண்டும் என்பதில்லையா? உன்னுடைய உறுதி காரணமாக (will power) அவைகள் தாமே அடங்க வேண்டும். தாமே அடங்குவதென்றால்கூட, இடர்ப் பாடாகத்தான் இருக்கும். எவ்வளவு அற்புதமான இசையைக் கேட்டுக்கொண்டிருந்தாலும்கூட அந்தப் பக்கம் இரண்டு பேர் பேசிக்கொண்டிருந்தார்களே யானால், காதில் விழத்தான் செய்யும். ஆகவே,