பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அ.ச. ஞானசம்பந்தன் என்ற வேறுபாட்டிற்கு இடமில்லை என்றான். பிறர் படும் துன்பம், துயரம் ஆகியவற்றை இரு நாட்டாரும் பார்க்கும்பொழுது அவனுக்கும் இவனுக்கும் உள்ள் வேறுபாடு தெரியும். மேலை நாட்டார்கள், மக்கள் துயரத்தைத் துடைப்பதற்காகத் தீர்க்கதரிசிகள் முயன்றதைப் பற்றிக் கூறுவர். ஆனால், இங்கே பிறருடைய துயரத்தைப் பார்க்கின்றான் புத்தன், கருணையையுடைய புத்தன் அதைப் பெரிதுபடுத்த வில்லை. தன்னாலே முடிந்த அளவுக்கு அந்தத் துயரத்தைப் போக்க முயன்றான் என்பதில் தவறே இல்லை. ஆட்டுக்குட்டிக்குப் பதிலாகப் பலிபீடத்தில் தன் கழுத்தைக் கொடுக்கப் போகிறான். ஆனால், "சகோதரர்களே, நீங்கள் பாவத்திற்கு ஆளாகப் போகிறீர்கள்; அதனால் நரகத்திற்குப் போவீர்கள்" என்று சொல்லவில்லை. காரணம், எல்லா உயிர்களையும் படைத்த வன் இறைவன், எல்லா உடல்களிலும் உயிர் வடிவமாக இருப்பவன் ஆண்டவனே. நீ நரகத்திற்குப் போவாய் என்று சொல்கின்ற அளவுக்கு அதிகாரம் எவனுக்கும் இல்லை. அதனால்தான் இந்த நாட்டு ஆன்மிகவாதி எவனும் மத மாற்றத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் இந்த உலக வாழ்க்கையே நிலைபேறு இல்லாதது என்றால், இந்த உலகில் நீ நல்லவன் என்றால் அதுவும் நிலைபேறு இல்லாதது தானே! ஆகவே, நிலைபேறு இல்லாததொன்றை எதற்காக விளம்பரப்படுத்த வேண்டும் வலி இருக்கிறது, வயிற்று வலி. ஏதோ உண்ணக் கூடாததனை உண்டிருக்கலாம். இதை ஒரு பிரமாதமாக விளம்பரப்படுத்திக் கொள்கின்ற சூழ்நிலை தேவையில்லை. இந்த நாட்டுக்காரன் வலி முதலிய துயரத்திலுங்கூட ஒருவகை நடு நிலைமையை