பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 129 (equaninity) ஏற்றுக் கொள்ளுகின்றான். வலி என்பது நிலைபெற்றதன்று. சுகம், இன்பம் என்பவை எப்படி நிலைபேறு இல்லாதனவோ, அப்படித்தான் துன்பம், துயரம் ஆகியனவும் நிலைபேறு உடையன அல்ல. எனவே, நிலைபேறு இல்லாத வாழ்க்கைக்காக நீ ஒன்றும் சிரமப்பட வேண்டா. அவற்றைப் போகிற போக்கில் ஏற்றுக் கொள்ளலாம் என்று சொன்னார் கள் இந்த நாட்டில் தோன்றிய புத்த சமயக்காரர்கள். இந்து சமயத்தை எடுத்துக்கொண்டால், ஒன்றே ஒன்றைத்தான் பார்க்க வேண்டும். ஆன்மிகம் என்று சொன்னவுடன் திருநீறு பூசுதல், உருத்திராட்சம் அணிதல், தேங்காய் உடைத்தல், பிரசாதம் கொண்டு போதல் ஆகியவற்றுடன் குழப்பிவிட வேண்டா. ஆன்மிகத்திற்கும், இவற்றிற்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இவை ஒன்றுமே இல்லாமலும் ஆன்மிக வாதியாக இருக்க முடியும். கோயிலுக்குப் போகாமல், விபூதியோ நாமமோ போடாமல், உருத்திராட்சமோ, துளசிமணியோ அணியாமல் எந்தவிதத் தடையிலும் கட்டுப்படாமல் சிறந்த ஆன்மிகவாதியாக இருக்க முடியும். இதையும் இந்நாட்டார் ஏற்றுக் கொண்டார் கள். அந்த நாட்டுக்காரர்கள், நீங்கள் என் உபதேசத்தை நம்புவீர்களேயானால், இந்தக் காரியங் கைகூடச் செய்யலாம்; இல்லாவிட்டால் உங்களுக்கு நரகம்தான் சித்திக்கும் என்றார்கள். இதன் எதிராக இந்த நாட்டுக் காரன் நீ என்ன செய்தாலும் கவலையில்லை; உன் மனம் எப்படி இருக்கிறது என்பதே முக்கியம்’ என்றனர். இதை மக்களுக்குப் புரியவைப்பதற்காக எவ்வளவு தூரம் போனார்கள் தெரியுமா? மனிதனுக்கு நிறுவப்பட்டுள்ள கடமைகளைச் செவ்வனே செய்தால்தான் மிக உயர்ந்த நிலையை