பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 அ.ச. ஞானசம்பந்தன் அடையலாம் என்று கூறினார்கள். இந்த அடிப்படை எதை உணர்த்துகின்றது? ஆன்மிகம் என்பது சடங்குகள் அன்று என உணர்ந்து, அவற்றின் மேல் உட்கார்ந்திருப்பவன் எவனோ அவன்தான் ஆன்மிக வாதி. இன்றைய நிலையில் பெரிய பெரிய பட்டை யாகப் போட்டுக்கொண்டு, படுத்தால் 'முருகா", நின்றால் 'முருகா, உட்கார்ந்தால் 'முருகா என்று சொன்னால்தான் அவன் பெரிய பக்திமான், ஆன்மிக வாதி என்று சொல்லுகின்ற அளவு குழப்பம் ஏற்பட்டு விட்டது. உண்மையிலேயே இவற்றிற்கும் ஆன்மிகத் திற்கும் தொடர்பே இல்லை. அப்படியானால் எது ஆன்மிகம்? ஆன்மா என்ற ஒன்றைச் சிந்தித்தால், அதைச் சிந்திக்கத் தொடங்கினாலே அது ஜடம் (matter) என்று நினையாதபடி, அதற்கு அப்பாற்பட்ட ஒன்று என்ற கருத்தையும் ஏற்றுக் கொள்ளுகிறான். அந்த நிலையே ஆன்மிகத்தின் தொடக்கமாகும். ஏற்றுக் கொண்ட ஆன்மிக அனுபவ நிலையை நிரூபிக்க முடியுமா என்றால், நிரூபணம் பண்ண முடியாத ஒன்றாகும் இது. இந்த உலகாயதவாதி இருக்கின்றானே அவன் தான் நிரூபணம் இயலாது என்பதைக் காட்டினவன். எத்தனைபேர் அணுவையும், எலெக்ட்ரானையும், புரோட்டானையும் கண்ணால் கண்டு வியந்தவர்கள்? ஒருவன் என்னவோ சொல்கிறான், நாம் நம்பு கின்றோம். இந்த உலகத்தையெல்லாம் படைத்தவ னாகிய கடவுள் என்ற எவனோ ஒருவன் இருக்கின்றான்' என்று நான்கூடச் சொல்கிறேன்; அதனையும் நீங்கள் நம்பலாமே! ஆகவே, நீங்கள் நம்பும் எல்லாவற்றையும் நிரூபணம் என்ற ஒன்றினால் நிரூபித்துவிட முடியும் என்பது விஞ்ஞானத்திலும் கிடையாது; ஆன்மிகத்திலும் கிடையாது. விஞ்ஞானத்