பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 131 திலும் நம்பிக்கை பெரும்பணி செய்கிறது. ஆன்மிகத் திலும் அவ்வாறே. இந்த நினைவினால் பெறுகின்ற பயன்கள் இருக்கின்றன. அவற்றை நினைத்துத்தான் இவர்களும் வாழுகின்றார்கள், அவர்களும் வாழு கின்றார்கள். ஆன்மா என்ற ஒன்றை ஏற்றுக்கொண்ட பொழுது இந்த ஆன்மா உலகம் முழுவதும் நிலைத்திருக்கின்றது என்பதைக் காண்கின்றார்கள். அந்த எண்ணம் வந்ததோ இல்லையோ, வேறுபாடு, மாற்றம் என்ற எண்ணத்திற்கே இடம் இல்லாமல் போய்விட்டது. இங்கேயும் ஆண்டவன் இருக்கின்றான், அங்கேயும் ஆண்டவன் இருக்கின்றான் என்றால் பகை என்ற இடத்திலேயும் ஆண்டவன்தான் இருக்கின்றான். நீங்கள் மெட்டீரியலிசத்தில் இருக்கின்றவர் களுடைய வளர்ச்சியையும், ஆன்மிகத்தில் இருக்கின்ற வர்களுடைய வளர்ச்சியையும் இப்பொழுது ஒரு தராசில் வைத்துப் பார்க்கலாம். பிறரைத் துன்புறுத்தியோ கொன்றோ தம் கொள்கைக்கு இழுத்தல் அவர்களுக்கு இயல்பு. சமுதாயத்திற்காகத் தனி மனிதனைப் பலியிடுவதில் தவறு இல்லை என்று உலகாயதவாதிகள் நினைக் கின்றார்கள். அது அவர்களுடைய அடிப்படைத் தத்துவம். இந்த நாட்டுக்காரன் அப்படி நினைக்க வில்லை. ஈ, எறும்பிலிருந்து மனிதன்வரை சங்கிலித் தொடர்பாக இருக்கின்ற ஆன்மா ஒன்றே என்று நினைப்பதினாலேயே ஈ, எறும்புகட்குக்கூடத் துன்பம் விளைவிக்கக்கூடாது என்று நினைக்கின்றான். இதன் எதிராக உலகாயதன் அனைத்தையும் ஜடப்பொருள் என்றும், அவற்றின் இயல்புகளே குணங்கள் என்றும் குறிப்பதால் ஒருவன் ஒன்றை நல்லது அல்லது ಆ.6.6T-10