பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 அ.ச. ஞானசம்பந்தன் உயர்ந்தது என்று கருதினால் - அதனை ஏற்றுக் கொள்ளுமாறு மற்றவர்களை வற்புறுத்தலாம்; அதில் தவறில்லை என்று நினைக்கிறான். ஆன்மிகவாதி இக் கருத்தை ஏற்றுக் கொள்வதே இல்லை. உயர்ந்தது என்று சொல்லுவதே தவறு என்பது எதனால் எனில், இன்றைக்கு இதுதான் உயர்ந்தது என்று ஒன்றை நினைத்தால் நாளைக்கு மற்றொன்று உயர்ந்ததாக இருக்க முடியுமல்லவா? இன்றைக்கு நல்லது என்று நீ நினைக்கின்றது நாளைக்கும் நல்லது என்று யார் சொல்லப் போகிறார்கள்? இன்றைய சூழ்நிலையிலே நீ நல்லது செய்யவேண்டுமென்று நினைத்துச் செய்வ தான்ாலும் அது பிறருடைய துன்பத்திற்கு ஏதுவாகக் கூடாது. . உலகாயத அடிப்படையில் வந்த அந்த நாட்டில் வளர்ந்த ஆன்மிகத்தில், நீங்கள் பாவிகள் நீங்கள் அஞ்ஞானிகள், உங்களை உயர்வழிக்குக் கொண்டு செல்ல எந்த வழியையும் பயன்படுத்தலாம்' ான்று கூறுகிறவர்கள் உண்டு. இது நல்லது என்று கூறுகிறவர்கள் உண்டு. நல்லது என்று இன்றைக்கு இந்தச் சூழ்நிலையில் நான் ஒன்றை நினைக்கிறேன், அவ்வளவுதான். ஆனால், இதைச் சொல்லுவதற்குக் கூட உரிமையில்லை என்று நினைக்கின்றேன். காரணம், எனக்கு இந்தச் சூழ்நிலையில் நல்லதாக இருப்பது மற்றொரு சூழ்நிலையில் நல்லதாக இருக்குமா என்பது வினா. என்னுடைய சூழ்நிலையில் இன்றைக்கு ஒன்றை நல்லது என்கின்றேன். உன்னுடைய சூழ்நிலையில் அதே ஒன்று நல்லது என்பதை நாம் எப்படிச் சொல்ல முடியும் ? உன்னிடத்திலும் ஆண்டவன் இருக்கின்றான், என்னிடத்திலும் ஆண்டவன் இருக்கின்றான். எல்லா வற்றிலும் உள்ளுறைந்து இருக்கின்ற ஆண்டவனைக்