பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 (). ೨ಆ. ஞானசம்பந்தன் உலகத்தைக் காக்க வேண்டும் என்று கருதுவதில்லை. உலகாயதவாதி தனி மனிதனை அழித்துச் சமுதாய்ம் முன்னேற வேண்டும் என்று நினைக்கின்றான். ஆன்மிகவாதி தனி மனிதன் ஒருவனுக்கும் துன்பம் வேண்டா என்று நினைக்கின்றான். ஏன்? தனி மனிதனிடத்திலும் இறைவனைக் காணுகின்றான், சமுதாயத்தினிடத்திலும் இறைவனைக் காணு கின்றான், உலகத்திடத்திலும் இறைவனைக் காணுகின்றான். ஆகவே, தனி மனிதனை அழித்து நன்மையைப் பெற வேண்டும் என்று ஆன்மிகவாதி நினைப்பதே இல்லை. என்றாலும், புரட்சி என்றால் உலகாயத வாதிதான் புரட்சி பண்ணுகின்றான் என்று நினைக்க வேண்டா. மார்க்சும், லெனினும் வருவதற்கு முன்பு பல்லாயிரம் ஆண்டுக் காலத்திற்கு முன்னரே சமய வாதிகள் புரட்சி பண்ணியிருக்கிறார்கள். உலகத்தில் அறிவின் விளக்கம் குறைந்திருந்த காலத்தில் உணர்வின் அடிப்படையில் பேருண்மையைக் கண்ட சமயவாதிகள்தாம் புரட்சி செய்திருக்கின்றார்கள். அந்தப் புரட்சியின் பயன் நீங்கள் நினைப்பது போல அறிவுப் புரட்சியன்று, பிறரைத் திருத்தி உயர்த்தும் புரட்சியேயாகும். அப்படியானால் சமயத்தின் பெயரில் ஏன் இத்தனை பெரிய சண்டைகள், குழப் பங்கள் என்று க்ேட்கத் தோன்றும். உலகத்திலே நடந்த சண்டைகளில் தொண்ணுறு பங்கு சமயச் சண்டை கள்தாமே என்று கேட்கலாம். - இதுவரை யான் கூறிவந்தது ஆன்மிகத்தையே தவிர, புற வாதமிடும் சமயத்தைச் சொல்லவில்லை. சமயவாதிகள் வேறு, ஆன்மிக வாதிகள் வேறு. ஆன்மிக வாதி சமயவாதியாகவும் இருக்கலாம். சமய