பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அ.ச. ஞானசம்பந்தன் 'பயனற்றன, தீமை பயப்பன என்று ஒதுக்க முனைகின்றனர். - ஆன்மிகம் என்பது ஆன்மாவினுடைய அடிப்படையாகத் தோன்றும். ஆன்மா என்பது ஒவ்வோர் உயிரினிடத்திலும் இருப்பது. உயிரன்று ஆன்மா. உயிர் என்பதனை மூச்சுக் காற்றளவிலே நிறுத்தி விட்டார்கள். ஆன்மாவை அதற்கும் அப்பாற் பட்ட ஒரு பொருளாகக் கண்டார்கள் ஆன்மிகர். அந்த ஆன்மாவின் அடிப்படையில் கட்டப்பட்ட ஆன்மிகத் திற்கு இலக்கணம் வகுத்தார்கள். மனிதனுடைய வாழ்வு, குறிக்கோள் உடைய வாழ்வாக அமைய வேண்டுமானால், அது ஆன்மிக வாழ்க்கையில்தான் முடியும் என்று கருதினார்கள். அந்த ஆன்மிகத்தின் அடிப்படையில் குறிக்கோள்களை வைத்தார்கள். மனித வாழ்க்கை உயர்ந்தது என்றால் - கேவலம் விலங்கின் வாழ்க்கையிலிருந்து உயர்ந்தது என்றால் - அது குறிக்கோள் என்பது பிற உயிருக்காகத் தியாகம் செய்கின்ற வாழ்க்கையாக - சத்தியத்தைக் கடைப் பிடிக்கும் வாழ்க்கையாக - அமைய வேண்டும் என்று சொன்னார்கள். இந்த ஆன்மிக வாழ்க்கையை யுடையவர்கள்தாம் உலகில் மிகப் பெரிய காரியங்களைச் செய்திருக்கின்றார்களே தவிர ஏனை யோரால் அவற்றைச் செய்ய முடியாது என்ற பேருண்மையையும் இந்நாட்டார் கூறினார்கள். ஆன்மிக வாழ்க்கையை நம்புகின்றவர்கள் மறந்தும் தவறு செய்ய முடியாது என்று கூறினார்கள். ஆன்மிக வாழ்க்கையையுடையவர்கள் உலகமே பெறுவதாக இருந்தாலும், ஒருவனுக்குத் துயரம் தந்துதான் அப் பரிசிலைப் பெற வேண்டும் என்றால், பெற மாட்டார்கள் என்ற பேருண்மையைக் கூறினார்கள்.