பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்மிகமும் உலகாயதமும் 139 ஆன்மிகவாதிகள் கீழைநாடு, மேலைநாடு ஆகிய எல்லா நாடுகளிலும் உள்ளனர். ஆன்மிகத்தின் பேரில் எத்தனையோ குப்பை கள் ஏறி, இன்று ஆன்மிகம் என்ற சொல்லிற்கே பொருள் விளங்காது என்ற நிலைமைக்கு வந்து விட்டது. இந்த நிலை மாறவேண்டுமானால் - உண்மையான ஆன்மிகத்தின் பொருள் விளங்க வேண்டுமானால் - மக்களுடைய வாழ்வு பயனு டையதாக இருக்க வேண்டுமானால் - எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்ற வேண்டுமேயானால், அது உலகாயதர்களால் செய்ய இயலாத காரியம் என்பதையும் ஆன்மிகம் என்ற ஒன்றுதான் மனிதனை மனிதனாக்கும் என்பதையும் அறியல் வேண்டும்.