பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 அ.ச. ஞானசம்பந்தன் களோ அவற்றையெல்லாம் விநாயக வழிபாட்டிலே சேர்த்திருப்பதைக் காணுகிறோம். தமிழ்நாட்டைப் பொறுத்த மட்டில் அருணகிரியார் சொல்வது போல 'அப்பமொடு அவல் பொரி கொழுக்கட்டை' முதலியன இவருக்கு வைத்து, நைவேத்தியமாக வழங்கப்படுவதைக் காணுகிறோம். என்ன காரணத் தினாலே இந்தக் கொழுக்கட்டை அவல் நைவேத்திய மாகப் படைக்கப்படுகின்றன என்று சொல்லுகின்ற முறையிலே இல்லை. ஏதோ ஒரு காலத்தில் இது அவனுக்குரிய பொருளாகத் தமிழர்களாலே கருதப் பட்டு அதுவே பரம்பரையாக வந்திருக்கிறது என்று அறிகின்றோம். இனி, விக்னம் என்று சொல்லப்படுகின்ற இடையூறு என்பது மனித வாழ்க்கையில் எல்லோ ருடைய வாழ்க்கையிலும் ஏதோ ஒரு காலத்தில் அல்லது பல காலங்களில் குறுக்கிடத்தான் செய்யும். விக்னம் அல்லது இடையூறு இல்லாத ஒரு மனிதன் வாழ்ந்தான் என்றால் அது நம்பமுடியாத ஒரு காரியம். எனவே இடையூறு வரும்போது என்ன செய்வது? இடையூற்றைப் போக்குவதற்கு மனிதன் முயல் கின்றான். ஆனால் முயற்சியினாலே எல்லா இடையூறு களையும் போக்கிவிட முடியும் என்று ஒரு காலத்திலும் நினைக்க முடியாது. சாதாரண இடையூறுகளைக் கூடப் பல சமயங்களில் நம்மாலே போக்கிட முடியாது. அப்படிப்பட்ட நிலையிலே நாம் என்ன செய்கின்றோம்? சாதாரணமாக நம்மோடு உடன் இருக்கின்றவர்கள், பெரியவர்கள், வலுவுடையவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள் என்பவர்களுடைய உதவியை நாடி நம்முடைய இடையூறுகளைப் போக்கிக் கொள்கின்றோம். இனி நம் இனத்தவர் களுடைய இடையூறுகளைப் போக்க வேண்டுமே