பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று தோன்றினார் ? . 143 யாண்ால் நம்மைவிடப் பலம்பொருந்தியவர்களுடைய உதவியை நாடுகின்றோம். மனித சமுதாயம் முழுவதும் எவ்வளவு உயர்ந்தவர்களாக இருந்தாலும் அவர் களுக்கு இடையூறு வரும்போது யாரைச் சென்று அணுக முடியும்? அப்படிப்பட்ட நிலையில்தான் விநாயகப் பெருமானை நாம் நினைக்கின்றோம். எத்தகைய இடையூறு ஆயினும் உலகியல் கடந்த இடையூறாக இருந்தாலும் சரி, தெய்வக் கோளாறாக இருந்தாலும் சரி, அந்த இடையூற்றைப் போக்குவதற்கு விநாயகப் பெருமானைத் துணையாக அழைக் கின்றோம். ஒரு காரியத்தைத் தொடங்குகின்றோம் என்றால் அது செம்மையாக முடிய வேண்டும். இடையூறு இல்லாமல் முடிய வேண்டும் என்பதற்காக முதன் முதலாக விநாயகப் பெருமானை வணங்குகின்றோம். ஐயா உம்முடைய துணையோடு உம்முடைய அருளைக் கொண்டு இந்த முயற்சியில் நான் ஈடுபடுகின்றேன். உன்னுடைய திருவருள் முன்னே நின்று எவ்விதமான விக்னமோ அல்லது இடையூறோ இல்லாமல் இந்தப் பணி முடியுமாறு உதவ வேண்டும் என்ற கருத்திலேதான் தொடக்கத் திலேயே விநாயகரை வழிபட்டு நம்முடைய செயல் களைத் தொடங்குகின்றோம். இந்தப் பழக்கம் என்று வந்தது என்று தெரியாது. ஆனால் இன்று வலுவாக அமைந் திருப்பதைக் காண்கின்றோம். சங்கப்பாட்டு இடைக் காலத்திலே 9, 10 ஆம் நூற்றாண்டு வரையிலே வந்த நூல்கள் என்பவற்றில் விநாயக வணக்கம் சொல்வ தாகக் காணப்படவில்லை. அதற்குப் பிறகு வந்த நூல்கள் எல்லாம் விநாயக வழிபாட்டோடுதான் தொடங்குகின்றன. கந்தபுராணம் பாடவந்த பெருமகனார் 'திகட சக்கரச் செம்முகம் என்று