பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ல் அ.ச. ஞானசம்பந்தன் தொடங்குகிறார். இந்த விநாயக வழிபாடு தமிழகத்திலே வலுவாக வேரூன்றி விட்டது. மிகச் சிறந்த கொள்கை, கருத்து என்பவற்றை அடிப்படை யாகக் கொண்டு விநாயகப் பெருமான் வழிபாடுகள் தோன்றினாலும், இது பற்றிய கதைகள் நிரம்ப தோன்றியிருக்கின்றன என்பதும் உண்மை. பெளராணி கர்கள் கிராமங்களிலேயிருந்து மக்களைக் கவருவதற் காக எத்தனையோ கதைகளைப் பேசியிருக்கிறார்கள். அந்தக் கதைகளில் பல அவர்களுடைய கற்பனைகளில் தோன்றியவை ஆகும். இப்படிப் பல்வேறு கதைகள் இருந்தாலும் இக் கதைகள் அனைத்தும் சில உயர்ந்த தத்துவத்தைக் குறிப்பனவாக இருக்கும். சில மிக மட்டமானவையாக இருக்கும். இம்முறையிலே விநாயகப் பெருமானுடைய தோற்றத்தைப் பற்றிய கதைகள் பல எழுந்தன. பொருளாக, மணிகள் கோத்த மாலையில் நடுவே நூல் இருப்பது போல் இருக்கின்ற ஒரு கருத்து. உயிர்கள் எப்போது துன்பத்தை அனுபவிக்கின்றனவோ உயிர்களுடைய வாழ்க்கைக்கு எப்போது இடையூறு ஏற்படுகின்றதோ, அப்பொழுது அதைப் போக்குவதற்கு விநாயகப் பெருமானுடைய திருவருளை நாடினால் நிச்சயமாக அந்த இன்னல்கள் இடையூறுகள் நீக்கப்படும் என்பதுதான், இக்கருத்து எல்லாக் கதைகளிலும் நடுவே இருப்பதைக் காண்கின்றோம். இனி விநாயகப் பெருமான் ஒரு கொம்பை ஒடித்திருப்பதைக் காண்போம். அதற்காக ஒரு கதை தோன்றிற்று. மகாபாரதத்தை வியாசர் சொல்ல. மாமேரு மலையில் எழுதுவதற்காக எழுத்தாணியாக விநாயகர் தம்முடைய தந்தங்களில் ஒன்றை ஒடித்துப் பயன்படுத்தினார் என்பது அது. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இந்த நாட்டிலே விநாயக வழிபாடு, 'தனக்கென்று ஒரு தலைவன்