பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் ( 147 மிகப் பழையதாகிய திருமுருகாற்றுப்படை ஒளியை மிகப் பெரியதாக உலகம் உவப்ப வலன் ஏர்பு திரிதரு பலர்புகழ் ஞாயிறு கடற்கண்டாங்கு என்று பேசும். ஏழாம் நூற்றாண்டிலே தோன்றிய திருநாவுக்கரசர் . சொற்றுணை வேதியன் சோதி வானவன் என்று சொல்லுவார். அவரை அடுத்து வந்த மாணிக்கவாசகர் சோதியே கடரே சூழ்ஒளி விளக்கே என்று பேசுவார். அதனையும் அடுத்து வந்த திருவிசைப்பாக்காரர் ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே என்று பேசுவார். அவரையும் அடுத்து, கிட்டத்தட்ட நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் வந்த தாயுமானவப் பெருந் தகையாகிய சித்தர் அங்கிங் கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய் ஆனந்த பூர்த்தி ஆகி, அருளொடு நிறைந்த தெது? என்று சொல்லுவார் என்றால் சங்ககாலம் தொடங்கி இதுவரையிலே இறைப்பொருளை நாடிச் சென்ற பெரியோர்கள் அனைவரும் ஒளியாகவே இறைப் பொருளைப் பேசுகின்றதைக் காணுகின்றோம். அதே மரபில் வந்தவர் ஆதலால் வள்ளற்பெருமான் 'அருட்பெருஞ்சோதி என்ற அற்புதமான தொடரை இறைவனுக்குச் சூட்டி மகிழ்கின்றார். ம.எ.எ.-11