பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 149 இந்த நாட்டைப் பொறுத்த மட்டிலே வள்ளல் பெருமான் 19-ஆம் நூற்றாண்டிலே தோன்றினார் என்றால், திருஞானசம்பந்தர், நம்மாழ்வார் முதலியவர்கள் 7-ஆம் நூற்றாண்டிலும், இராம கிருஷ்ணர் முதலானவர்கள் வடநாட்டைப் பொறுத்த மட்டிலே, நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னரும், இன்னும் பழைய அடிப்படையில் செல்வோமேயானால் ஏசு, குமரகுருபரர் ஆகியவர் களும் வரன்முறையாகக் கல்வி பயிலாது வந்த பெரியவர்கள் ஆவார்கள். ஏனையோரைப் போல கல்வி பெறாமலேயே கல்வியினால் பெற வேண்டிய அத்துணைச் சிறப்புகளைப் பெறுகின்ற சிறப்பு இவர் களைப் பொறுத்ததாகும். அத்தகைய மரபிலே வந்தவ ராகிய வள்ளல்பெருமான் இப்போது தொடக்கத்திலே அதாவது இளம்பிராயத்திலேயே, தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர் கந்தவேளைப்பற்றிப் பாடுகின்றார். பின்னே அவரது வாழ்க்கை எப்படி மலரப்போகிறது என்பதை அரும்பு ஆக இருக்கின்ற அந்தப் பருவத்திலேயே, அந்தப் பாடலின் மூலம் காட்டுகின்றார். பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளல் பெருமான் தோன்றுகின்ற காலத்திலே இந்தத் தமிழ்ச் சமுதாயம் எப்படி இருந்தது என்பதையும் ஒரு பாடலில் சொல்லுகின்றார். பரம்ஏது, வினைசெயும் பயன்ஏது பதிஏது, பசுவது, பாசம் ஏது, பத்தினது அடைகின்ற முத்திஏது அருளேது பாவபுண்ணியங்களேது என்று, வாயில் வந்ததை எல்லாம் பேசிக் கொண்டு, அதையே வாழ்க்கை என்று சுகமே கைகண்ட பலன்