பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 ல் அ.ச. ஞானசம்பந்தன் என்று நினைக்கின்ற மனித சாதி நிறைந்திருந்தது. அப்படிப்பட்ட சமுதாயத்திலே தோன்றுகின்ற அந்த இளம் குருத்து என்ன நினைக்கின்றது? வாழ்க்கை கேவலம் இந்த முறையிலே செலுத்தப்பட வேண்டிய ஒன்று அன்று என்று நினைக்கின்றது. அதனுடைய, பயனாக ஒருசிலவற்றை ஒதுக்கி, ஒருசிலவற்றை ஏற்றுக், கொண்டு ஒரு குறிக்கோளுடன் செல்ல வேண்டியது தான் வாழ்க்கையின் அடிப்படை என்பது உணர்ந்து அதனையும் பேசுகின்றார். ஒதுக்கப்பட வேண்டியவற்றை முதலில் சொல்லுகின்றார். காமஉட் பகைவனும் கோபவெங் கொடியனும் கனலோப முழு மூடனும் கடுமோக வீணனும் கொடுமதம் எனுந் துட்ட கண்கெட்ட ஆங்காரியும் ஏமம் அறு மாச்சரிய விழலனும் கொலையென் றியம்புபா தகனுமாம்.இவ்எழுவரும் இவர்க்குற்ற உறவான பேர்களும் எனைப் பற்றிடாமல் அருள்வாய் இதிலே சிறப்பு என்னவென்றால் ஒரு மனிதன் முன்னேற வேண்டுமானால் முதலில் தன் மனத்தை துய்மையுடையதாக ஆக்கிக் கொள்ள வேண்டும். மனத்திலே குடியிருக்கின்ற இந்தக் கொடியவர்கள் அனைவரையும் ஒதுக்கினாலொழிய நன்மை உள்ளே புக இடமில்லை. பட்டினத்துப்பிள்ளை அற்புதமாகப் பாடுவார். 'ஐந்து பொறிகளாகிய யானைகளைக் கட்டி, அந்த யானைகள் அசிங்கப்படுத்திய என் மனத்தை இப்பொழுது தூய்மைப் படுத்தி, அப்பாழ் அறையை உனக்குப் பள்ளியறை ஆக்கினேன். இறைவனே வந்து தங்குவாயாக'