பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

152 அ.ச. ஞானசம்பந்தன் இந்த நற்பண்புகள் வந்து குடியேறிய மனத்திலே கொடிய எண்ணங்கள் நசிகின்றன. அதாவது ஆண்டவனை அடையவேண்டுமென்ற தாகம், மிக விரைவாக, வலுவாக வளர்கின்றது. அப்படி வளர்கின்ற காலத்திலே எப்போதும் இறைவனைக் காணவேண்டுமென்ற துடிப்பிலே ஒரு அற்புதமான பாடல் வருகின்றது. பண்ஏறும் மொழி அடியர் பரவி வாழ்த்தும் . பாதமலர் அழகினை இப்பாவி பார்க்கில் கண்றுை படும்என்றோ கனவி லேனும் காட்டென்றால் காட்டு கிலாய் கருணைஈதோ என்று நொந்து பாடுகின்றார். 'பெருமானே, உன்னுடைய திருவடிகளைக் கனவிலேயாவது பார்க்க "வண்டுமென்று நான் விரும்புகின்றேன். ஆனால் என்னுடைய துரதிருஷ்டம் என் கண் பார்த்தால் அந்தத் திருவடிக்கு கண்ணேறு பட்டுவிடும் என்ற எண்ணத்தினாலா திருவடிமலர்களைக் காட்ட மாட்டேன் என்று சொல்லுகிறாய்" என்று நினைந்து வருந்துகிற வருத்தத்தை, அந்த இளம்பிராயத்திலேயே அவர் மனம் எந்த வழியிலே செல்கிறது, என்பதை நாம் அறிய முடிகிறது. இனி மற்றொரு சிறப்பையும் திருவருட்பாவை ஒருமுறை கற்றவர்களும் அறிய முடியும். ஆறு திருமுறைகளாக அப்பெருமகனாருடைய பாடல்கள் தொகுக்கப் பெற்றிருக்கின்றன. முதலாம் திருமுறையில் இருந்து ஆறாம் திருமுறை வரையில் உள்ள பாடல்கள் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளிலே அப்பெருமகனார் செய்த பாடல்களாகும். இதில் தனிச் சிறப்பு என்ன வென்றால் இந்த ஆறு திருமுறைகளையும் வரன்