பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 157 என்று சொல்லி வருந்துகின்ற இயல்பைக் காண முடிகின்றது. இதனுடைய அடுத்த பரிணாமமாக நாம் காணுகின்றது - வள்ளல் பெருமான் விக்கிரக வழிபாட்டிலே பெரிதும் ஈடுபட்டார் என்பதை அறிய முடிகிறது. ஏன் இதனை இவ்வளவு வலியுறுத்திப் பேசுகிறேன் என்றால் இந்த விக்கிரக வழிபாட்டில் இவ்வளவு வலுவாக இருந்த அவர் - அவரது வளர்ச்சி முதிர முதிர ஆறாம் திருமுறை பேசுகின்ற காலத்திலே எல்லாவற்றையும் உதறி அடுத்துச் செல்லுகின்ற பெருவளர்ச்சியைக் காண முடிகின்றது. அங்கேதான் தம்முடைய முத்திநெறி வாழ்க்கையைச் சொல்லிச் சென்றார். இங்கே "திங்கள் விளங்கும்' என்பதாக சிவனுடைய வடிவத்தை உறுப்பு உறுப்பாக அமைத்துப் பாடுகின்ற பாடல்களைக் காண முடிகின்றது என்றால் இந்த விக்கிரக இறைவழிபாடு ஒருவருடைய வளர்ச்சிக்கு தொடக்கத்தில் துணையாக இருக்கிறது என்பதை இந்த நாட்டவர்கள் நம்பினார்கள். மாபெரும் வேதாந்தம் பேசிய விவேகானந்தரும் கூட விக்கிரக வழிபாடு தேவை என்பதைத்தான் சொன்னார். அதுவும் தொடக்கத்திலே மனம் சென்று குவிவதற்கு விக்ரக வழிபாடு தேவை என்பதை வள்ளல் பெருமானுடைய வாழ்க்கையிலேயே நாம் காண முடிகின்றது. இனி விக்கிரகத்தைப் பற்றி விரிவாகப் பேசிய அந்தப் பெருமகனார் சைவ சமயத்தில் ஈடுபட்டு, அதற்குரிய குறிகள், அடையாளங்கள் ஆகியவற்றிலும் ஈடுபட்டிருக்கிறார்.