பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 அ.ச. ஞானசம்பந்தன் கடவுள் நீறு இடாக் கடையரைக் கண்காள் கனவிலேனும் நீர் காணுதல் ஒழிக என்று பேசுகின்றார். இறைவனுக்குரியதாகிய திரு நீற்றினை இடாதவர்களை மறந்தும்கூட கண்விழித்துப் பார்க்காதே என்று பேசுகின்றார். அடவுள் மாசுதிர்த் தருள்திரு நீற்றை 够 அணியும் தொண்டரை அன்புடன் காண்க 'யாரையாவது காண வேண்டுமேயானால், அவர்கள் திருநீறு அணிந்தவர்களாக இருத்தல் வேண்டும். திரு நீறு அணியாதவர்களைக் காணவே கூடாது' என்று பேசுகின்ற ஒரு வளர்ச்சியைக் காணுகிறோம் என்றால் விக்கிரக வழிபாடு, சைவ சமயம், சைவ சமயத்தின் அடிப்படையில் இருக்கின்ற திருநீறு முதலானவற்றுக்கு எல்லையில்லாத மதிப்புத் தருகின்ற வளர்ச்சியைக் காணுகின்றோம். - . இந்த வளர்ச்சி எங்கே கொண்டு போய் விடுகிறது. வள்ளல் பெருமானை என்றால் ஒரு பூரணத் தொண்டராக, அடியாராக அவரைக் கொண்டு செலுத்துகின்றது. இந்த நாட்டைப் பொறுத்தவரையில் பெரியபுராணம் கற்றவர்கள் அனைவரும் அறிவர், தொண்டர்களுக்கும், அடியார்களுக்கும் ஒரு பொது இலக்கணம் வகுக்கப்பட்டிருந்தது இந்த நாட்டிலே. தொண்டர்கள் என்று சொன்னவுடனே ஏதோ இந்த உலகத்தையும் குடும்பம் முதலானவற்றை யும் துறந்து காட்டிற்குச் சென்று கனசடையிட்டு வாழவேண்டுமென்று தமிழர்கள் ஒருக்காலும் விரும்பியதில்லை. அதிலும் சைவ சமயத்தைப் பொறுத்த மட்டில் இத்தகைய துறவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவேயில்லை. இங்கே இருந்துகொண்டு