பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 159 தங்கள் கடமைகளைச் செய்துகொண்டு, அதே நேரத்தில் பற்றற்ற வாழ்க்கை வாழ்பவர்களாக இருப்ப வர்களையே தொண்டர்கள் என்று கருதினார்கள். தொண்டர்களுக்கு இலக்கணம் சொல்ல ஒரே ஒருவர்தான் தோன்றினார் இந்த நாட்டிலே அவர் சேக்கிழார். அவர் சொன்னார், ஆரங் கண்டிகை ஆடையும் கந்தையே அவர்கள் அணிந்திருக்கிற ஒரே ஒரு ஆபரணம் ருத்திராக்கம். அவர்கள் அணிந்திருக்கிற ஒரே ஆடை கந்தலாடை. - ஒடுஞ் செம்பொனும் ஒக்கவே நோக்குவார் ஒடும் செம்பொன்னும் அவர்களைப் பொறுத்த மட்டில் ஒன்றாகவே காட்சி அளிக்கின்றன. அதைவிட ஒருபடி மேலே சென்று சொல்லுகிறார். கூடும் அன்பினில் கும்பிட லேஅன்றி விடும் வேண்டா விறலின் விளங்கினார் 'ஆண்டவனே, இந்த இடம் இருந்து, இந்த உலகத்திலே இருந்து அன்றாடம் உன்னை வழிபடுவதைத் தவிர மோட்சமே கிடைப்பதானாலும் வேண்டா என்று பேசுகின்ற வீரம் படைத்தவர்கள் என்று பேசுகிறார் சேக்கிழார். அந்தப் பெரிய புராணத்திலும், சேக்கிழா ரிடத்திலும் எல்லையில்லாது ஈடுபட்டவராகிய வள்ளல்பெருமான் அப்படியே அந்தக் கருத்தை வாங்கிக் கொள்கிறார். அணிகொள் கோவனக் கந்தையே நமக்கிங் கடுத்த ஆடை