பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 0 அ.ச. ஞானசம்பந்தன் என்று சிவஞான போதம் தொடங்குகிறதே, அதிலே ஈடுபட்ட காரணத்தினாலே வள்ளல்பெருமான், அதுவாய் அவளாய் அவனாய் அவையும் கதுவாது நின்ற கணிப்பாய் என்று பேசிக்கொண்டு போகிறார். இனி அந்த நெஞ்சறிவுறுத்தல் வளர வளர, இவருடைய வளர்ச்சியையும் அதிலே காண முடிகிறது. மற்றிருந்த வானவரும் வாய்ந்தசைக்கா வண்ணமொரு சிற்றுரும்பை நாட்டிநின்ற சித்தனெவன் ஒரு துரும்பை எடுத்துப்போட்டு, இதுதான் மூலப் பொருள் என்று உபதேசத்தைச் செய்கின்ற சித்தன் எவன் என்று குருவணக்கமாக சிலவற்றைப் பேசிக் கொண்டு செல்கிறார். அந்த 'நெஞ்சறிவுறுத்தல்' என்ற பகுதி முழுவதும் அவருடைய நெஞ்சே அவரை வளர்ச்சிக்குக் கொண்டு செலுத்துகிறது என்பதை அறிவதற்குப் பேருதவியாக இருக்கிறது. நாம்தேடா முன்னம் நமைத்தேடிப் பின்புதனை நாம்தேடச் செய்கின்ற நற்றாய்காண் என்கிறார். இறைவனையே குருவாகக் கொள்கின்ற இயல்பு இந்த நாட்டுக்கு மிகமிகப் பழமையான பழக்கமாகும். அந்த குருவுக்கு இலக்கணம் பேசுகிறார் இங்கே. நாம் தேடா முன்னம் நமைத்தேடி வருகின்றானாம். . . . பொதுவாக உலகத்திலே நாமாக ஒரு பொருளைத் தேடிச் சென்றால் அது நம்முடைய மனத்தளவிலே தான் நிற்கும். நம்முடைய மனம், கற்பனை, அறிவு என்பன எந்த அளவுக்கு விரிந்திருக் கின்றனவோ அந்த அளவுக்கேற்ற பொருளைத்தான்