பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மந்திரங்கள் என்றால் என்ன ? 3


சொற்களை எடுத்துக்கொண்டு அவர்கள் அவற்றைத் தம்முடைய ஆற்றல் காரணமாக, தம்முடைய சக்தி முழுவதையும் அந்தச் சொற்களில் ஏற்றி, இவை மந்திரங்களாக ஆகக் கடவன' என்று ஆணையிடுவதன் மூலம் அவற்றை மந்திரங்களாக மாற்றுகிறார்கள். இதனைத்தான் தொல்காப்பியனார்

நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த மறைமொழி

என்று சொல்கிறார். இந்த ஆணையிடுதல் என்பது, குறைமொழியாக உள்ள எழுத்துக் கோவைகளை, சொற்கோவைகளை, சக்திபெற்ற மந்திரங்களாக மாற்றுவதுதான்.

அப்படியானால் இந்தச் சொற்கள் எப்படி இந்த ஆற்றலைப் பெறுகின்றன என்று சிந்திக்க வேண்டும். எல்லாச் சொற்களுக்கும் எழுத்துகளுக்கும் Frequencies என்று சொல்லப்படுகிற அதிர்வுகள் உண்டு. இந்த அதிர்வுகள் ஒலி சக்திகளாகும். இந்த அதிர்வுகளை எல்லா எழுத்துகளும், சொற்களும் பெற்றிருந்தாலும் எந்த அதிர்வுகளோடு எந்த அதிர்வுகளைச் சேர்த்தால் அவை பயன்படும் என்பதை ஆராய்ந்து அவர்கள் அறிந்திருந்தார்கள். அப்படி அறிந்திருந்த காரணத்தினாலேதான் இந்தப் பல்வேறு எழுத்துகளை ஒன்று சேர்ப்பதன் மூலம் பல்வேறு அதிர்வுகளை ஒன்று சேர்த்து புதியதொரு ஆற்றலை அவை பெறுமாறு செய்கின்றார்கள். அப்படி ஆற்றலைப் பெறுமாறு அவற்றைச் செய்து விட்ட பிறகு அவை மந்திரங்களாக மாறி விடுகின்றன.

பல சமயங்களில் அகூரங்கள் என்று சொல்லப்படுகின்ற மந்திரங்களுக்குப் பொருளே