பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 163 நாம் காண முடியுமே தவிர இதனைக் கடந்து நிற்கின்ற பொருளை நம்முடைய மனம் காணுதல் இயலாது. எனவேதான் விக்கிரக வழிபாட்டை முதலில் வைத்தார்கள். இந்த அடிப்படையில் சொல்ல வேண்டு மானால் குரு நம்மைத் தேடி வரவேண்டுமே தவிர நாம் குருவைத் தேடிச் செல்வது என்பது ஏலாத காரியம். ஏனென்றால் நம்முடைய அறிவுக்கு அப்பாற் பட்ட ஒரு எல்லையில் இருக்கின்ற குருவை நாம் கண்டுகொள்வதும் இயலாத காரியம். கண்டால் அதனை ஏற்றுக்கொள்வதும் இயலாத காரியம். எனவே நாம் குருவைத் தேடிச் செல்வதைவிட குரு நம்மைத் தேடி வருகிறான் என்கிற அற்புத வளர்ச்சியை வள்ளல்பெருமான் இங்கே சுட்டுகிறார். அப்படி குரு நம்மைத் தேடி வரும்போது பார்த்த மாத்திரத்திலேயே, நம்முடைய பக்குவத்தை அறிந்து, நமக்கு எது தேவையோ அதனைச் செய்கிறான். நாம் குருவைத் தேடிச் செல்லும்போது நம்மைப் பற்றி நாம் ஏதேதோ நினைத்துக் கொண் டிருக்கிறோம். ஆனால் நம்முடைய பக்குவம் என்ன, தரம் என்ன என்பதை நாம் அறிய முடியாது. எனவே அதற்கேற்ற குருவைத்தான் நாடிச் செல்ல முடிகின்றது. அதற்குப் பதிலாக குரு நம்மைத் தேடி வரும்போது நம்முடைய தகுதி, பரிபக்குவம் ஆகியவற்றை ஒருகணம் பார்த்தமாத்திரத்திலே முடிவு செய்து விடுகிறார். ஆகையால் அவன் நமக்கு வேண்டிய வற்றைச் செய்கிறான் என்ற கருத்தைப் பேசுகின்றார். 'நாம் தேடா முன்னம் நமைத் தேடி வருகின்றான். பின்பு என்ன செய்கிறான்? பின்புதனை 参见 நாம் தேடச் செய்கின்ற நற்றாய் காண் LD.6T, or, -12