பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 ல் அ.ச. ஞானசம்பந்தன் அவன் வந்து உபதேசம் செய்து, பின்பு தன்னையே நாம் தேடுமாறு செய்கிறான். எப்படியும் தன்னையே நாம் தேடுமாறு செய்கிறானே, இந்தக் காரியத்தை நாம் முன்னமே செய்தால் என்ன? அது நடைபெறாத காரியம். அவன் வழிகாட்டிய பிறகு அந்த வழியிலே சென்று அவனை அடைய முடியுமே தவிர, நாமாகத் தேடிச் சென்றால் அது பெரும்பாலும் நற்பயனை விளைவித்தது இல்லை. காலம் அறிந்தே கனிவோடு இந்த இரண்டு சொற்களும் மிகமிக முக்கியமானவை. காலம் அறிதல் என்பதனை உலக இயலுக்கே வள்ளுவப் பேராசான் பெருமையாகச் சொல்லுவான். காலம் அறிதல் வேண்டும். இடம் அறிதல் வேண்டும். கேவலம் இந்த உலக இயலுக்கே காலமும், இடனும் அறிய வேண்டுமானால் ஆன்மிக வளர்ச்சியைத் தேடிச் செல்கிறவர்களுக்கு காலமும், இடனும் அறிந்து உபதேசம் செய்தாலொழிய அது பயன்படுவதில்லை. ஆகவே நெஞ்சறிவுறுத்தலில் அற்புதமாக இந்தக் கருத்தைப் பேசுவார். காலம் அறிந்தே கனிவோடு நல்லருள்பால் ஞாலம் மிசை அளிக்கும் நற்றாய்காண் காலம் அறிதல் முக்கியம். அதைவிட முக்கியம் குருவாக வருகிறவனுக்கு நம்முடைய குறைபாடுகளை எல்லாம் ஏற்றுக்கொண்டு, போனால் போகிறான் என்ற கனிவோடு அருள் செய்ய வேண்டிய மனோ நிலை இருக்க வேண்டும். அவனுடைய நிலையை ஒப்பு நோக்க நாம் எங்கோ அதலபாதாளத்தில் இருக்கிறோம். அப்படியானால் நம்மைத் தேடி வந்த