பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ዚበõfl மந்திரம் © 17: பிறர் சிரிப்பதைப்பற்றி அவர்கள் கவலைப்படுகிறார் கள் என்பது கருத்தன்று. அதைவிட ஆழமான பொருளும் அங்கே இருக்கிறது. 'பகவானே உன்னுடைய திருவருளை நான் பெற்று, மக்களால் புரிந்துகொள்ள முடியாமல், நான் பெற்றது தீது என்று அவர்கள் பேசுவார்களேயானால் இழுக்கு எனக்கன்று. உனக்காகும். ஏன்? 'திருவருளைக் கொடுத்து அதைப் பெற முடியாமல் செய்து விட்டாய் என்று உன்னுடைய பெருமைக்குக் குறைபேசும் உலகம். ஆகவே தயவு செய்து விட்டுவிடாதே என்று பேசுவார். இப்படிப் பேசுவதற்கு அடிப்படை என்ன? ஏன் இப்படிப் பேசவேண்டும் இறைவன் நேரே இவருக்குக் காட்சி தந்தான் என்ற பெருமையைப் பின்னே பேசுகிறார். ஒருமுறை அந்தக் காட்சியைப் பார்த்துவிட்ட காரணத்தினாலே, திருப்பியும் அவர் கள் அது தங்களைவிட்டு நீங்காமல் இருக்க வேண்டு மென்று நினைக்கின்ற நினைப்பு நியாயமானதேயாகும். இவர் குருவாகக் கொண்ட மணிவாசகப் பெருமான் பேசுவார். கணக்கில்லாத் திருக்கோலம் நீ வந்து காட்டினாய் கழுக்குன்றிலே என்று சொல்லுவார். ஆகவே எல்லையில்லாததாகிய நாம ரூபமற்ற பொருள், நாம ரூபமுடைய எல்லாப் பொருளுமாக அமைந்திருக்கின்றது. அந்தப் பொருள் கள் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகளாகக் கூட இருக்கின்றன. என்றாலும் முரண்பட்ட பொருள் களினிடையே அந்த இறைவன் இருக்கின்றான் என்று மணிவாசகப்பெருமான் சொல்லியதைக் கம்ப நாடனும் பேசக் காண்கின்றோம். அவன் Ша.6Т.«т.-13