பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் ( 173 என்றார். அவனுடைய திருவடியை வணங்குதலாகிய காரியத்தைச் செய்வதற்குக் கூட அவனுடைய திருவருள் வேண்டுமென்ற பேருண்மையை அறிந்தவர் கள் இந்த நாட்டவர்கள். ஆதலால் இங்கே வள்ளல் பெருமான் அந்தப் பெரிய கருத்தை மிக அழகாகச் சொல்கிறார். இரவு நேரத்திலே நான் இருக்கும் இடத்தைத் தேடி வந்து கதவைத் தட்டி, "என் மகனே இந்தா என்று நீ தந்தாயே ஐயா என்னுடைய தகுதியை நோக்கியா தந்தாய்? இல்லை. உன்னுடைய கருணைத் தன்மையை என் புகல்வேன்? எல்லையில்லாத கருணாமூர்த்தி நீ ஆகையாலே நீ என்மாட்டுக் கொண்ட பெருங் கருணையினாலே உன் அருளை வெளிப்படையாகக் கொண்டு எனக்கு உன்னைக் காட்டினாய் என்ற கருத்தைப் பேசுகின்றாரே - இந்தக் கருத்தும் இந்த நாட்டிலே மரபுபற்றி வருகின்ற கருத்தாகும். எங்கே என்னை இருந்திடந் தேடிக்கொண்டு அங்கே வந்தடை யாளம் அருளினார். என்று சொல்லுவார் திருநாவுக்கரசர். ஆகவே வரிசையாக வருகின்ற இந்த மரபு பற்றிய உண்மையே வள்ளல்பெருமானாலே பெரிதாகப் பேசப்படுகின்றது. இறைவன் திருவருள் எளிதாகக் கிடைத்து விட்டால் அதிலேயும் ஓர் அல்லல் ஏற்படுவதுண்டு. மனிதன் முயன்று பெற்றால் ஓரளவு அதைக் காத்துக் கொள்ள வேண்டுமென்ற முயற்சியிலே ஈடுபடுவான். அப்படியில்லாமல் எளிதாக ஒரு பொருள் கையிலே கிடைத்துவிடுமானால் அதைப் போற்றிப் பாது காக்கின்ற தன்மை மனிதனிடம் இல்லாமல் போய் விடும். இந்த அடிப்படைத் தத்துவம் மனித மனத்திற்கு இயல்பாக அமைந்திருக்கிற காரணத்தினாலே இந்தப்