பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 அ.ச. ஞானசம்பந்தன் ஞானசம்பந்தப்பெருமான் தனக்கு உபதேசித்த தாக, வள்ளல் பெருமான் பேசுவது உயிர் அனுபவம் உற்றிடுமானால், அதனிடத்தே அருள் அனுபவம் உறும். குற்றமற்ற அந்த அனுபவத்திலே சுத்த சிவ அனுபவம் பயிலும் என்று சொல்லுகின்ற முறையிலே, இந்த உபதேசம் செய்வதற்குரிய தகுதியும் அவர் மாட்டு உண்டு என்று சொல்வதுபோல மிக அற்புதமாக ஞானசம்பந்தருடைய வாய் மொழியில் இந்தக் கருத்தைப் பேசுகின்றார். அந்தப் பகுதியோடு ஐந்தாம் திருமுறை முடிந்துவிடுகிறது. வள்ளல் பெருமானுடைய வாழ்க்கையிலே முதல் திருமுறையில் தொடங்கி ஐந்தாம் திருமுறை முடிய அவர் வளர்ந்துகொண்டிருந்த வளர்ச்சியைக் கண்டு கொண்டிருந்தோம். விக்கிரக வழிபாட்டிலே, உருவ வழிபாட்டிலே உருவ வழிபாட்டுக்குரிய சில கொள்கைகளிலே, அதற்குரிய சில அடையாளங் களிலே ஈடுபட்டுத் தொடங்கிய அந்த வாழ்க்கை இப்போது மெள்ள முதிர்ந்து வந்து உயிர் அனுபவம், இறை அனுபவம் இரண்டையும் பெறுகின்ற நிலைக்கு வந்துவிட்டதை ஐந்தாம் திருமுறை முடித்துக் காட்டு கின்றது. இதற்கு பிறகு வள்ளல்பெருமானுடைய வாழ்க்கையை முழுவதுமாகக் காட்டுகின்றது ஆறாம் திருமுறை. அது தொடங்குகின்ற நேரத்திலேயே மன்புருவ நடுமுதலா மனம்புதைத்து நெடுங்காலம் என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க அன்புருவம் பெற்றதன்பின் அருளுவம் அடைந்துபின்னர் இன்புருவம் ஆயினைநீ எழில்வாத வூர்இறையே என்று ஐந்தாம் திருமுறையை முடிக்கும்போது மணி வாசகப்பெருமானைப் பார்த்துப் பேசுகின்றார். ஐயா வாழ்க்கையில் ஒருவன் எளிதாகக் கைக்கொண்டு