பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 177 முன்னேறுவதற்குரிய வழியை நீ அல்லவா வகுத்துத் தந்தாய். நெடுங்காலம், என்புருவாய்த் தவஞ்செய்வார் எல்லாரும் ஏமாக்க நீ என்று பேசப்படுகின்ற புருவத்தின் மத்தியிலே, சிந்தையைச் செலுத்தி, ஏகாக்ர சித்தர்களாக தவம் செய்கின்றவர்கள் எல்லாம் நெடுங்காலம் காத்திருக்க அன்புருவம் பெற்றதன்பின் அருளுருவம் அடைந்துபின்னர் இன்புருவம் ஆயினைநீ அன்பே வடிவாக ஆனாய். அதன் பயனாக அருளே வடிவாக மாறினாய் என்றால், இறைவனை அடைவதற்கு மிக எளிதான வழி அன்பு வழி என்பதை இங்கே விரிவாக எடுத்துக் காட்டுகின்றார். இவருக்கு முன்னர்த் தோன்றிய சித்தராகிய திருமூலர் - அன்பும் சிவமும் இரண் டென்பர் அறிவிலார் அன்பே சிவமாவ தாரும் அறிகிலார் அன்பே சிவமாவ தாரும் அறிந்தபின் அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே என்று சொன்னாரே அதை அடியொற்றி வந்து, கண்ணப்பருடைய வரலாற்றிலே ஈடுபட்ட மாணிக்க வாசகர் அன்பின் முழுவடிவாக ஆன கண்ணப்பரை நினைந்து பேசுவார். அடுத்து அந்தக் கண்ணப்ப ருடைய வாழ்க்கையை எடுத்துப் பேசுகின்ற சேக்கிழார் தன்புரிகம். வினைஇரண்டும் சாருமல மூன்றும்அற அன்புபிழம் பாய்த்திரிவார் அவர்கருத்தின் அளவினரோ? என்று சொல்லுவார். ஆகவே மனிதனுக்குரிய வாலீசன் என்று சொல்வார்களே, தன்பரிசு, வினை இரண்டு - அதாவது நல்வினை, தீவினை, ஆணவம்,