பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 0 அ.ச. ஞானசம்பந்தன் ஓரினத்தார் என்ற ஒருமைப்பாட்டை - சின்தளமிஸ் காண்பவராகத் தொடங்கிவிடுகிறார். இதற்கு முன்னே சைவசித்தாந்த அடிப்படை யிலே இறைவனைப்பற்றிப் பேசிய வள்ளலார், இப்போது முழுவதுமாக மாறி அன்பு, அன்பு, அன்பு என்று பேசும்போது வேறுபாட்டிற்கு அங்கு இடமே இல்லாமல் போய்விடுகிறது. உலகத்திலுள்ள சமயங்களை எல்லாம் எடுத்து ஆராய்கின்றார். எந்தச் சமயமாக இருந்தாலும் அந்தச் சமயத்தில் - நம்புகின்ற கடவுள் பொருளுக்கு ஒரு நாமம், ஒருருவம், ஒன்றுமில்லாப் பொருளாயினும் ஆயிரம் பெயர்கள் இட்டிருப்பார்கள். அந்தப் பெயர்கள் ஒன்றுக்கொன்று மாறுபடலாம். என்றாலும் எந்தச் சமயவாதியாக இருந்தாலும் ஒன்றுமட்டும் உறுதி, ஒளி என்ற ஒன்று மாறுபடப்போவதில்லை. எந்தச் சமயவாதியும் தன்னாலே கருதப்பட்ட பரம்பொருள் ஒளிவடிவானவன் என்று சொல்லித் தான் தீருவான். எங்களது கடவுள் இருட்டு வடிவானவன் எனச் சொல்லத் துனியமாட்டார்கள். எனவே உலகத்திலுள்ள சமயங்களை எல்லாம் எடுத்து ஆராய்ந்தவராகிய வள்ளல்பெருமான் இந்த 'ஒளி' என்ற கருத்தை வாங்கிக் கொள்ளுகின்றார். இதற்கடுத்தபடியாக ஒளிவடிவாக இருக்கிற இந்த ஆண்டவன் பண்பாடு என்று அவனுக்குரிய குணம் ஒன்று இருக்குமானால் அது எதுவாக இருக்க முடியும் என்றால் அருள் அல்லது கருணையாகத்தான் இருக்க முடியும். ஏக தெய்வ வணக்கம் பேசுகின்ற இஸ்லாமியர் கள் கூட பரம கருணை உடையவன் என்றுதான் இறைவனைச் சொல்லுவார்கள். ஆகவே கருணை,