பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகா மந்திரம் 181 ஒளி' என்ற இரண்டும் உலகிலுள்ள எல்லாச் சமய வாதிகளுக்கும் பொது என்பதை வள்ளல்பெருமான் உணருகின்றார். அதுமட்டுமல்ல. கடவுள் கொள்கை பற்றிப் பேசாமல் இருந்த பெளத்த, ஜைனம் கூட 'ஒளி' என்பதையும், கருணை' என்பதையும் விட்டுவிடுவதே இல்லை. புத்தனைப் பற்றிப் பேசும்போதெல்லாம் 'பிறர்க்கென முயலும் பெரியோன்', என்றும் 'தனக்கென வாழாப் பிறர்க்குரியாளன்' என்றும் 'கருணையே வடிவானவன் என்றேதான் பேசுகின்றன பெளத்த நூல்கள். எனவே, 'கருணை, ஒளி இரண்டையும் வாங்குவதன் மூலமாக க்ரேடெஸ்ட் காமன் பாக்டர்’ என்று சொல்லுகிறோமே அதுபோல உலகத்திலுள்ள சமயங்களை எல்லாம் பிழிவோமேயானால், இரண்டு கருத்துகள் மிஞ்சுகின்றன. ஒன்று இறைவன் ஒளி வடிவானவன்; இரண்டாவது அவன் கருணை வடிவானவன். இந்த இரண்டையும் எடுத்துக்கொண்ட வள்ளல் பெருமான் ஒரு சூத்திரம் போல அமைக்கின்றார். . அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி என்ற மகாமந்திரம் போல் இருக்கிற இந்தத் தொடரை வேண்டா என்று கூறுவார் எவருமே இரார். "சமயம் வேண்டா என்று சொல்கிறவர்கள் கூட அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை என்று சொல்லப்படுகிறபோது அதனை எதிர்த்துப் பேச நாவெழாமல் நின்றுவிடுவார்கள்.