பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182 அ.ச. ஞானசம்பந்தன் எனவே உலகத்திலுள்ள சமயங்களை எல்லாம் ஒன்றுதிரட்டி, அவற்றை ஒருங்கிணைந்த சமயமாகச் செய்ய வேண்டுமென்ற கருத்திலே பேசிய வள்ளல் பெருமான். அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ் சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ் சோதி என்று பேசுவதைக் காணுகின்றோம். 6ஆம் திருமுறை முழுவதும் அதன் விரிவாகவே இருக்கக் காணு கின்றோம். அதுமட்டுமல்ல. அந்த மாதிரி நிலையிலே ஒரு பிரச்சினை தோன்றத்தான் செய்கிறது. இப்படி ஒரு பிறப்பிலேயே விக்கிரக வழிபாட்டில் ஆரம்பித்து, அருட்பெருஞ் சோதி என்ற நிலைக்கு ஒருவர் வளருவாரேயானால் அவர் வாழுகின்ற காலத்திலே உள்ள சமுதாயம் நிச்சயமாக அவரைப் புரிந்து கொள்ள முடியாது. புரிந்துகொள்ள முடியாமையி னாலேதான் அருட்பா - மருட்பா போராட்ட்ங்கள் தோன்றின. அந்தக் கருத்தை அடியொற்றி வள்ளல் பெருமானே பாடுகிறார், ஆறாந் திருமுறையில். பெருகியபேர் அருளுடையார் அம்பலத்தே நடிக்கும் பெருந்தகை என் கணவர் தோழியிடத்தில் பேசுவதுபோல அமைந்திருக்கிறது இந்தப் பாடல். தோழி, என்னுடைய கணவர் என்னைப் பொறுத்தமட்டில் அவர் அம்பலத்தே நடிக்கும் இயல்புடையவர். ஆனால் அவர் பெயர் என்ன என்று கேட்கிறாயா? அருகர் புத்தர் ஆதிஎன்பேன் அயன்என்பேன். நாரா யணன்என்பேன் அரன்என்பேன் ஆதிசிவன்என்பேன்