பக்கம்:மந்திரங்கள் என்றால் என்ன.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 ல் அ.ச. ஞானசம்பந்தன் வைத்து எல்லா உயிர்களும் ஒன்று என்றால் வேற்றுச் சமயம் என்று நினைப்பதற்கோ, வேற்று மனிதர்கள் என்று நினைப்பதற்கோ, வேற்று உயிர்கள் என்று நினைப்பதற்கோ எதுவும் இல்லாத காரணத்தினாலே, அன்பினாலே அனைத்தையும் தழுவி எல்லா உயிர்களும் வீடு பேற்றினை அடைய விரும்புகின்றன என்றால் அந்த உயிர்கள் அனைத்தும் சிந்திக்க வேண்டியது ஒன்றே ஒன்று. அனைவரும் ஒன்று என்று கூடிச் சிந்திக்கின்றபோது பொதுத்தன்மையாக இருக்கிற மகாமந்திரம் அருட்பெருஞ் சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை அருட்பெருஞ்சோதி என்று கூறுகின்றார் என்று காண்போமேயானால், இன்றைக்கு 163 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றிய ஒரு பெருமகனார் இந்த நாடும் உலகமும் உய்வதற்குக் கண்ட பெருவழியே - நாம் சிந்திக்கின்ற பெரு வாய்ப்பினைப் பெற்றிருக்கின்றோம் என்பதை அறிய முடிகின்றது.